Annamalai Kuppuswamy bjp : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி டெல்லியில் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
யார் இந்த அண்ணாமலை?
தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை கர்நாடக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். 2019 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.அண்ணாமலை கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரில் டி.சி.பி.யாக பொறுப்பேற்றார். கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் லக்னோவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.
பொறுப்பேற்றதும், கடலோர மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தியதற்காக நற்பெயரைப் பெற்றார். அண்ணாமலை உடுப்பியின் 'சிங்கம்' என்றும் பிரபலமாகக் குறிப்பிடப்பட்டார். கடுமையான விதிகளை அமல்படுத்தினார். இரவு 11:30 மணியளவில் பார்கள் மற்றும் உணவகங்கள் பலவந்தமாக மூடப்பட்டன.
அண்ணாமலையின் பயணம் தொடங்கியது 2013 ஆம் ஆண்டு உடுப்பி மாவட்டத்தில் தான். பின்பு அவர், இடமாற்றம் செய்யப்பட்டு, ஜூலை 2016 ஆம் ஆண்டு சிக்கமகளூரு மாவட்டத்தின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். பாபா புடங்கிரி பிரச்சினையை கையாண்டதற்காக அவர் மேலும் பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து 2017 டிசம்பரில் இந்து மற்றும் முஸ்லீம் சமூக உறுப்பினர்களிடையே அமைதி காக்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.
பி.எஸ். எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ராமநகர மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்க அண்ணாமலைக்கு 2018 ல் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. பின்பு அண்ணாமலை அவராகவே 2019 ஆம் ஆண்டு தனது பணியை ராஜினமா செய்தார். ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த பின்னர் கரூர் மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை அண்ணாமலை வழங்கி வந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டியில் மோடியை ஏன் பிடிக்கும்? ரஜினியின் அரசியல் நிலைபாடு போன்றவற்றை பேசியிருந்தது, அவர் பாஜகவிலோ அல்லது ரஜினியின் கட்சியிலோ இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-25T152119.000-300x167.jpg)
ரஜினிகாந்த் கட்சி துவங்கினால், அவரது முதல்வர் வேட்பாளராகவும் இவர் இருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. இதை அண்ணாமலையே வரவேற்று இருந்தார். அப்படி வாய்ப்பு கிடைத்தால், பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறிவந்தார். இந்நிலையில், அண்ணாமலை இன்று மதியம் 1 மணி அளவில் டெல்லியில் பாஜகவில் இணைய இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை குப்புசாமி சிறப்பு பேட்டி வாசிக்க
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அண்ணாமலை பாஜகவில் இணைகிறார். அண்ணாமலை பாஜகவில் இணைவது குறித்து அவரிடம் பிரபல ஆங்கில ஊடகம் எடுத்திருக்கும் பேட்டியில், ''பாஜக தேசியக் கட்சி. நானும் தேசியவாதி. தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய பாதையை பாஜகவால் காட்ட முடியும் என்று நம்புகிறேன் தமிழக அரசியலில் மாற்றுப்பாதை வேண்டும். சமூக மாற்றம் என்பதைவிட, அரசியல் மாற்றம் மிகவும் முக்கியமானது.
தமிழகத்தில் பாஜக குறித்து தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல இங்கு பாஜகவை யாரும் புரிந்து கொள்ளவில்லை'' என்று தெரிவித்துள்ளார். பாஜகவில் எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் இணைய இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் கவரப்பட்டு பாஜகவில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
';தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil