Advertisment

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் நானே கோவில் முன்பு போராடுவேன்; அண்ணாமலை

தமிழ்நாடு அமைச்சரவையில் 99% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது; ஆளுனர் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Annamalai kovai

கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தப்போது

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் நானே போராட தயங்க மாட்டேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,

இதையும் படியுங்கள்: ஆளுனரை வாபஸ் பெறக் கோரி போராட்டம்: தலைமை தாங்க தி.மு.க-வுக்கு திருமா அழைப்பு

அமைச்சரை நீக்க ஆளுநருக்கு உரிமை இருக்கா? என்பதில் பா.ஜ.க உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநர்களிடம் கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் படி, நீக்கம் செய்வதாக ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பது முதல்வருக்கு தெரியும், முதல்வர் வரம்பு மீறி செயல்படுகிறார்.

Advertisment
Advertisement

ஆளுநர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு பா.ஜ.க வேறு. தமிழ்நாடு அமைச்சரவையில் 99% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆளுநர் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றித்தின் மீது தான் வெறுப்பு. இது தனிமனித தாக்குதல் கிடையாது. முதல்வர் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது. ஒரு மனிதனுக்காக அரசாங்கத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்

கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரைக் செய்துள்ளனர். கரூரில் கட்சி வாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்ற கட்சிகளை பழி வாங்குகிறது. செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளார்.

சிதம்பரம் கோவில் பற்றி பொதுப்பார்வை இல்லாமல் இருக்கிறது. தீட்சிதர் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோவில் உள்ள நிலையில், மாநில அரசு கோவிலை கட்டுபடுத்த நினைக்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீறி அரசாங்கம் செயல்படுகிறது. மாநில அரசு அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மீறி கொடுத்தால் கோவில் முன்பு நானே பேராட தயங்கமாட்டேன்.

வருகின்ற ஜீலை 28 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கவுள்ளேன். அமித்ஷா அதனை தொடங்கி வைக்கவுள்ளார். கட்சி நிகழ்வாக ஆப்ரிக்கா செல்ல இருப்பதாலும், உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்க வேண்டி உள்ளதாலும் நடைபயணம் தாமதமாகிறது.

மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. படங்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்குமாறு எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, நிஜத்தில் நான் நடிக்க தெரியாதவன் என்று கூறினார். விஜய் அரசியல் வருவதாக கூறும் கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் வந்தால் வரட்டும், என்று கூறினார். விஜய் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிக்கு கண்டனம் எழுந்தது குறித்த கேள்விக்கு படத்தில் புகைபிடிப்பதால் இளைஞர்கள், குழந்தைகள் அதை பின்பற்றி கெட்டு போவாங்க என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார். சாலையில் கூடதான் புகைப்பிடிக்க செய்கிறார்கள். அதை பார்த்து கெட்டு போகமாட்டார்களா? ஆனால் மத்திய அரசின் விதி முறைகளை பின்பற்றி மறைக்க வேண்டியதை மறைத்து, வாசகங்களை போட்டு படத்தை வெளியிட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Bjp Tamilnadu Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment