சென்னை லயோலா கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பிரெஞ்ச் இலக்கியம் படித்து வரும், திருச்சியைச் சேர்ந்த மாணவி அனுக்ரீத்தி. இந்த வருடம் நடைபெற்ற மிஸ் இந்தியா பட்டத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு வென்றார். பட்டம் வென்றதை தொடர்ந்து திருச்சி சென்றார். சென்னை திரும்பிய அவர், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அனுக்ரீத்தி, அவருடைய வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த அவருடைய அம்மாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். “என்னுடைய வெற்றிக்கு முழுக்காரணமாக இருந்தது என் அம்மா தான். இந்த பட்டத்தை பெற்றதிற்காக என்னுடைய அம்மாவிற்கு தான் நான் முதலில் நன்றி சொல்லுவேன்” என்று கூறினார்.
“இந்த சமூகத்தில் ஒரு பெண்ணை தனியாளாக வளர்ப்பது மிகவும் சவாலான விசயம். மேலும், நம்முடைய கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை தொடர்ந்து செல் என்று ஊக்கம் அளிப்பதெல்லாம் மிகவும் பெரியது. உன்னால் முடியும் என்று என்னை தட்டிக் கொடுத்து வளர்த்தவர் என் அம்மா தான்” என்று குறிப்பிட்டார் அனு.
“தமிழின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்துவிடாது” - தமிழ் பற்றி கூறிய அனுக்ரீத்தி
இந்த வருட இறுதியில், சீனாவில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க போகிறார் அனுக்ரீத்தி. “மனுஷி சில்லார் போன்று நானும் பட்டத்தை வெல்லுவேன்” என்று நம்பிக்கையுடன் பத்திரிக்கையாளார்களிடம் பேசினார் அனுக்ரீத்தி வாஸ்.
யாரிந்த அனுக்ரித்தி...
திருநங்கைகளுக்கான நல்ல சமூகத்தினை உருவாக்கிட விரும்பும் அனு, விரைவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க இருக்கின்றார்.