இந்திய சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நடைப்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட தமிழக வீரர் பழனியின் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் முழு வீச்சில் சித்த மருத்துவம்: மாநகராட்சி இன்று முக்கிய முடிவு
தமிழக வீரர் பழனியின் உடல் இன்று அதிகாலை சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை ஏழு மணியளவில் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய-சீன எல்லையில், சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று தனி ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு கொண்டு வரப்பட்டு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பழனியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, ஊர் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர் பழனியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்திற்கு மாற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பழனியின் இறந்த உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் உடலை இறக்கி அவரது வீட்டின் முன்பாக உறவினர்கள், பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு : சர்வதேச நாடுகள் எவ்வாறு இயல்பு நிலையை துவக்குகின்றன?
அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தமிழக முதல்வர் அறிவித்த நிதியுதவி ரூ.20 லட்ச ரூபாய்க்கான காசோலையை பழனியின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”