அயனாவரம் மாற்றுத்திறனாளி பாலியல் வழக்கில் கைதானவர் தூக்கிட்டு தற்கொலை!

வழக்கு விசாரணை முடிவில் பழனி உட்பட 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், அவர்கள் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

வழக்கு விசாரணை முடிவில் பழனி உட்பட 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், அவர்கள் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அயனாவரம் மாற்றுத்திறனாளி பாலியல் வழக்கில் கைதானவர் தூக்கிட்டு தற்கொலை!

Ayanavram girl abuse case convicted committed suicide : சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு, அங்கே வேலை பார்க்கும் நபர்கள் பாலியல் வன்கொடுமை கொடுத்தது தெரிய வந்தது. அவ்வழக்கில், அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்த காவலாளி பழனி, ப்ளம்பர் சுரேஷ் உள்பட 17 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா பாதித்தவரின் நுரையீரலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததா கர்நாடகா?

மேலும் படிக்க : கொரோனா பாதிப்பு : அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு ஏன்?

Advertisment
Advertisements

வழக்கு விசாரணை முடிவில் பழனி உட்பட 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், அவர்கள் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனை பெற்ற அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்று, புழல் சிறையில் பழனிசாமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சிறையில் இருக்கும் அறையில் லுங்கியை வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : சென்னை வாள்சண்டை வீராங்கனைக்கு அர்ஜூனா விருது பரிந்துரை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Crime

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: