/tamil-ie/media/media_files/uploads/2020/04/b344.jpg)
Quarantined patients refused take food cooked by scheduled caste woman
தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-லிருந்து 738-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 773 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 4,798-ல் இருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தமிழகத்திலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி - தமிழகத்திற்கு கொரோனா நிதி குறைவாக ஒதுக்கியது ஏன்?
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழகத்தில் 60,739 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 230 பேர் உள்ளனர்.
இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். தமிழகத்தில் 5 பேர் உடல்நலம் சரியில்லமால் உள்ளனர். 5 பேரை தவிர மற்ற அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது.
மக்களை நன்றாக புரிந்து கொண்ட சென்னை மாநகராட்சி... நடமாடும் மளிகைக் கடைகள் அறிமுகம்!
தமிழகத்தில் போதுமான அளவு முகக்கவசம் இருப்பு உள்ளது. 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று கொரோனவால் யாரும் உயிரிழக்கவில்லை. அதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது. மொத்தம் 21 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருங்கள், தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.