Advertisment

மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி - தமிழகத்திற்கு கொரோனா நிதி குறைவாக ஒதுக்கியது ஏன்?

Coronavirus Relief Fund : கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும் போது, 510 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CoronaVirus Relief Fund, Chennai High court, Central Government -

CoronaVirus Relief Fund, Chennai High court, Central Government -

Chennai High Court: கொரோனா பாதிப்பில் 2-ம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கிரணின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ: கோபமான விஜய் ரசிகர்கள்

ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர், ராஜேந்தர் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும் போது 510 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது போதுமானதாக இருக்காது என தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு, அதிக தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது, என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை, வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்ததுடன் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள், தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்றும், முன்வர தவறினால் அவர்களை கட்டாயப்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் பிரதமரையும், முதல்வரையும் பேச வரச்சொல்வதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும், ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அவர்கள் நிறுவனங்களின் தகவலை பெற்று உண்மைத்தன்மையை ஆராய வேண்டுமென்றும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மக்களிடையே அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா? நிபுணர் சொல்வது என்ன?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment