Bhogi Festival Date, Puja Timing 2020: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள், இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் ஆகவும், நிலைப்பொங்கல் வைக்கும் நாளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தை மாதம் பிறந்துவிட்டால் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி நல்வாழ்வு மலரும் என்ற ஏக்கத்தில் தான். அதற்காகவே தை பொங்கல் நாளுக்கு முதல் நாளான மார்கழி மாத கடைசி நாளை, அது நாள் வரையிலும் தாங்கள் அனுபவித்து வந்த துன்பங்களை போக்க வேண்டும் என்பதாற்காக போகி என்ற பெயரில் தமிழர்கள் பழங்காலத்தில் இருந்தே திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
போகி பூஜை வைக்க உகந்த நேரம்
போகி நாளன்று சூரிய உதயம் - காலை 07.14 மணி
சூரிய அஸ்தமனம் - மாலை 5.57 மணி
போகி சங்கராந்தி நிகழ்வு - அதிகாலை 02.14 மணி
போகி பண்டிகை தினத்தில், தாங்கள் பயன்படுத்தி வந்த பழைய பொருட்களை வீட்டுக்கு வெளியில் போட்டு கொளுத்தி விடுவதுண்டு. இதனால், தாங்கள் அதுவரை அனுபவித்து வந்த அனைத்து கஷ்டமெல்லாம் பறந்தோடிப் போகும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
போகி பண்டிகை என்பது, நம்முடைய மனதில் படிந்துவிட்ட அனைத்து கவலைகளையும், வெறுப்பு, கோபம், பொறாமை என தீய எண்ணங்களை அனைத்தையும் மனம் என்னும் வீட்டில் இருந்து வெளியில் தூக்கிப் போட்டு எரித்துவிட்டு, தை முதல் நாள் முதல் புது மனிதனாக நல்லவற்றை மட்டுமே செய்யும் புது மனிதனாக மாற வேண்டும் என்பதை உணர்த்தவே போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Hai guys : ரயில், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு என கோலாகலமாத்தான் ஆரம்பிச்சிருக்கு புத்தாண்டு
கண்ட கண்ட கெட்ட எண்ணங்களால் பாழாகிப் போன நம்முடைய மனதை போக்கிவிட்டு, புது மனிதனாக தை முதல் நாளில் அவதாரமெடுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே போகி கொண்டாடப்படுவதன் ரகசியமாகும். இதன் காரணமாகவே இதற்கு போக்கி என்ற பெயர் உண்டானது. ஆனால் அதுவே காலப் போக்கில் மருவி போகி என்றாகிவிட்டது. கிராமங்களில் போகி பண்டிகை நாளன்று விட்டுக்கு வெள்ளையடித்து, புது வர்ணங்கள் பூசி, வீட்டை அழகுபடுத்துவார்கள். வீட்டின் கூரையில் கண்ணுப்பீழை எனப்படும் பூலாப்பூ மற்றும் வேப்பிலையையும் சேர்த்து கட்டி வைப்பார்கள்.
போகி பண்டிகை தினத்தில், வீட்டுக்குள் தெய்வீக உணர்வுகளை, குணங்களையும் தூண்டுவதற்காகவும், நம்முடைய மனதையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காகவும் தான் வீட்டின் கூரையில் கண்ணுப்பீழையை கட்டி வைக்கின்றனர். போகி தினத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் முதலான தேவர்களை பூஜித்து அவர்களை திருப்தி செய்ய வேண்டிய நாளாகும்.
போகி பண்டிகை தினத்தன்று, நிலைப்பொங்கல் நிகழ்வு நடைபெறும். வீட்டின் தலைவாசல் எனப்படும் முன்வாசல் நிலைக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து, நன்கு தோகை போல் விரிந்த கரும்பு ஒன்றை சாற்றி வைத்து, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காட்டி வீட்டிலுள்ள தெய்வத்தை வணங்க வேண்டும்.
இன்றைக்கும் கிராமப் புறங்களில், இறந்த முன்னோர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல் இட்டு, அவர்களுக்கு பிடித்தமான கருவாட்டு குழம்பு வைத்து வழிபட்டு வருகின்றனர். போகி நாளில் முன்னோர்களையும், கிராம தேவதைகளையும் வணங்கி வழிபடுவோம் வாழ்வில் வளம்பெறுவோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.