scorecardresearch

பாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்

தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்

BJP appoints poll in-charges: Piyush Goyal for TN, JP Nadda for UP - பாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்
BJP appoints poll in-charges: Piyush Goyal for TN, JP Nadda for UP – பாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்

பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டாவது முறையும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், பாஜக தலைமை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி தேர்தல் பொறுப்பாளராகவும், அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரப் பிரதேசத்திற்கும், முரளிதர் ராவ் கர்நாடகாவிற்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், திரிபுரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க – தமிழகத்தில் துவங்குகிறது பாஜகவின் பொதுத்தேர்தல் பிரச்சாரம்… ஜனவரி 27 மோடி தமிழகம் வருகை…

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp appoints poll in charges piyush goyal for tn

Best of Express