BJP CT Ravi says other parties fear of Annamalai: சிதம்பரத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த பா.ஜ.க தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவியை திருச்சி பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் தலைமையில் பா.ஜ.க.,வினர் உற்சாகமாக வரவேற்றனர்.
அதன் பின்னர் சி.டி.ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தெரிவித்ததாவது; பா.ஜ.க.,வின் நோக்கம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.க.,வில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக தி.மு.க, காங்கிரஸ் குற்றம் சாட்டுகின்றது என்ற கேள்விக்கு, 5-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். தி.மு.க, காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான்.
இதையும் படியுங்கள்: கோவையில் மாற்றுத் திறனாளிகள் ஃபேஷன் ஷோ: வண்ண ஒளியில் வீல் வாக்!
2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு, நாங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு இடத்திலும் பா.ஜ.க.,வை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லி கேள்வியை தவிர்த்தார். அண்ணாமலை தலைமையின் கீழ் நாங்கள் எல்லா மக்களின் கைகளைப் பிடித்து நடந்து சென்றுக் கொண்டிருக்கின்றோம்.
மக்கள் சேவை மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம். நாளுக்கு நாள் பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை பார்த்து அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர். அவருடைய நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள். இதன் அடிப்படையில் பா.ஜ.க தமிழகத்தில் வலுவாக இருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/bjp-ct-ravi.jpg)
தற்பொழுது பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து வருவதைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது. அண்ணாமலையின் தாக்கத்தால் பா.ஜ.க வளர்ந்து வருவதை தி.மு.க.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் பாரதிய ஜனதாவை மிகவும் கேலி செய்தார்கள். நாலு பேரை வைத்துக்கொண்டு பா.ஜ.க இயங்கக் கொண்டிருக்கிறது என்றார். ஆனால் தற்போது மொத்த நாடும் எங்களுக்கு பின் உள்ளது. தற்பொழுது மத்தியில் ஆட்சியில் உள்ளோம். தமிழ்நாட்டிலும் மெதுவாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது.
வருகின்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்து வலிமையான தமிழ்நாட்டை மாற்றுவோம். தி.மு.க குடும்பத்திற்காக உழைக்கிறது. பாரதிய ஜனதா நாட்டை வலுப்படுத்துவும் நாட்டு மக்களுக்கு உழைக்க மட்டுமே உள்ளது. இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil