Advertisment

பாஜக-வின் வேல் யாத்திரைக்கு தடை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் மீட்பர் என்று கூறும் எந்தவொரு அமைப்பும் சமூக மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

author-image
WebDesk
New Update
Vel Yatra, Chennai High Court

வேல் யாத்திரை

பாஜக-வின் வேல் யாத்திரைக்கு ஆனுமதி தர முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழக பாஜக முன்மொழிந்துள்ள ‘வேல் யாத்திரையை’ (பேரணி) தடை செய்ய உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த யாத்திரை அனுமதிக்கப்பட்டால், கோவிட் -19 பரவுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் சமூக பிரச்னைகளை உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கும் என மனுதாரர் கூறினார்.

சத்து பிளஸ் டேஸ்ட்… ராகி தோசையை அடிச்சிக்க முடியுமா?

பாபர் மசூதி இடிப்பின் ஆண்டுவிழாவான டிசம்பர் 6-ஆம் தேதி இந்த பேரணியை முடிக்க திட்டமிட்டிருப்பது, இனவாத பிரச்னையை உருவாக்குவதற்காக மட்டுமே என மனுதாரர் பி.செந்தில்குமார் கூறினார்.

புதன்கிழமை, நீதிபதி எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணையைத் தொடங்கியபோது, மனுதாரரின் வழக்கறிஞர் இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். பேரணியை நவம்பர் 6-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை நவம்பர் 5-ஆம் தேதியான இன்று விசாரிக்க, பெஞ்ச் ஒப்புக்கொண்டது.

மாநிலத்திலும் நாட்டிலும் பொதுமுடக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் நோய்த்தொற்றுகள் குறைந்து கொண்டிருந்தாலும், மனநிறைவுக்கு வழியில்லை என்றும் குமார் கூறினார். அதேசமயம், தமிழக பாஜக பிரிவு நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்கி டிசம்பர் 6-ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் 'வேல் யாத்திரை' என்ற பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேரணி பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

நீங்க இனி மாறித்தான் ஆகணும்: தமிழகத்தில் பேட்டரி வாகனங்களுக்கு 100% வரி விலக்கு

"ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் மீட்பர் என்று கூறும் எந்தவொரு அமைப்பும் சமூக மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆனால் தொற்றுநோய்களின் போது ஒரு மாத கால அரசியல் பேரணியை நடத்துவதில் பாஜக மாநிலப் பிரிவின் செயல், கோவிட் -19 பரவுவதோடு மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் உருவாக்கக்கூடும்” என்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல்கள் உள்ளதால் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம்" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம், என மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை செய்துள்ளனர்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment