ஜெமினி பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர்கள் தாக்குதல் – விசாரணை தீவிரம்

காமராஜர் அரங்கத்திற்கு அருகே மாலை சுமார் 4.30 மணி அளவில் மர்ம பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன.

By: Published: March 3, 2020, 7:07:19 PM

சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே மர்ம நபர் ஒருவர் வீசிச் சென்ற வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது. இந்நிலையில் மர்ம நபர் வெடிகுண்டை வீசி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


ஜெமினி பாலம் என்று அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் என்பது சென்னையின் மிக முக்கிய பகுதியாகும். இதன் அருகில் தான் அமெரிக்க தூதரகம் உள்ளது. நட்சத்திர விடுதிகளும், பல முக்கிய அலுவலங்கள் உள்ளன. எந்நேரமும் இந்த இடத்தில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். குறிப்பாக, பீக் ஹவர்களில் இந்த வழியாக செல்ல வேண்டுமெனில், நீங்க பக்குவப்பட்ட பொறுமை காக்கும் நபராக இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட இடத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

சர்வதேச பெண்கள் தினம் : நல்ல உடல்நலத்துடன் கொண்டாட அழைக்கிறது சென்னை மெட்ரோ..

காமராஜர் அரங்கத்திற்கு அருகே மாலை சுமார் 4.30 மணி அளவில் மர்ம பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.

இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மர்ம நபர் ஒருவர் அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றிருக்கிறார். இதுவே வெடித்து சிதறி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

இதையடுத்து, குண்டு வெடித்த இடத்தில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை கைது செய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து – விசாரணைக்கு ஆஜரானது ஏன் : கமல் விளக்கம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bomb blast near gemini bridge police investigate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X