New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-75.jpg)
CAA Rangoli protest social activist Gayathri : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலத்த போராட்டங்களும் எதிர்ப்புகளும் கிளம்பி வந்தன. ஐ.ஐ.டி. மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்தும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தின் மூலம். சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பினை தெரிவித்தனர். சென்னையில் கடந்த வாரம் பொதுமக்கள் பலரும் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு சி.ஏ.ஏவுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இவ்வாறு கோலம் போட்ட மக்களை காவல் துறை கைது செய்தது. பின்னர் சில மணிநேரங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டனர்.
காவல்துறையின் செயல்பாட்டுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் முக ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வீடுகளின் முன்பு கோலம் மூலம் சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எம்.பி. தொல்.திருமாவளவன் மக்களோடு இணைந்து கோலம் போட்டு தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்தார்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காயத்ரி கந்தாடை என்ற பெண் ஃபைட்ஸ் ஃபார் ஆல் என்ற Association of All Pakistan Citizen Journalists என்ற பாகிஸ்தான் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபைட்ஸ் ஃபார் ஆல் என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருவதாக சென்னை கமிஷ்னர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த பெண்ணுக்கும் பாகிஸ்தானின் அந்த நிறுவனத்துக்கும் எவ்வளவு தூரம் தொடர்பு உள்ளது என்பதை விசாரித்து வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அறப்போர் இயக்கம் காயத்ரிக்கு ஆதரவு அளித்து வருகிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். இதற்கு போராட்டத்தை திசை திருப்ப சென்னை கமிஷ்னர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் கூறினார் காயத்ரி. மேலும் சிறுபான்மையினருக்கு எதிரான மனப்போக்கு காவல்துறையினருக்கும் இருக்கிறது என்பதையே இது வெளிகாட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
அறப்போர் இயக்கத்திற்கும் காயத்ரிக்கும் தொடர்பு இருப்பதாக ஏ.கே.விஸ்வநாதன் கூறியது குறித்து ஜெயராமனிடம் கேள்வி எழுப்பிய போது “கடந்த ஜூன் மாதம் ஆர்பாட்டம் ஒன்றினை நடத்த அனுமதி கேட்ட போது , கமிஷ்னர் அமைச்சர் ஒருவரை சந்தித்து தான் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறினார். அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு அமைச்சரிடம் எப்படி அனுமதி பெறுவது என்றுவிட்டுவிட்டோம். அதன்பிறகும் அறப்போர் இயக்கத்தினர் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் எம். சான்ட் ஊழலை வெளியிட்டோம். தங்களின் மீது இருக்கும் காழ்ப்புணர்வு காரணமாகவே அறப்போர் இயக்கம், காயத்ரிக்கு அளித்த ஆதரவு குறித்து அறிவித்துள்ளார் என்றும், காயத்ரிக்கும் எங்களின் அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை” என்றும் ஜெயராமன் அறிவித்தார்.
மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.