Advertisment

Tamil Nadu news today updates : சட்டப்பேரவைத் தனபால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78.39க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 72.28 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News today live updates

News today live updates

Tamil Nadu news today updates : முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். நெல்லை சேரன்மகாதேவி அருகே இருக்கும் கோவிந்தபேரி பகுதியை சேர்ந்த பி.எச். பாண்டியன் நெல்லை தொகுதியின் எம்.பியாகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ஏ.ஆர். ஷோ எனப்படும் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ஷோக்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. பெரியவர்களுக்கு இதற்கு ரூ.50-ம் குழந்தைகளுக்கு ரூ.15ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஈரான் தலைமை தளபதி உட்பட முக்கிய அதிகாரிகள் ஏவுகணை தாக்குதலில் கொலை

ஈரானின் தலைமை தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக்கில் செயல்படும் ஈரான் படைப்பிரிவின் துணை தலைவர் அபு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் நேற்று அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் கொல்லப்பட்டனர். ஈரானின் தலைமை தளபதி மீது அமெரிக்க அதிபரின் உத்தரவின் படி தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவித்துள்ளது அமெரிக்க விமானப்படை. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

 

Live Blog

Tamil Nadu news today updates : chennai weather, tamil nadu politics, TN local body election results இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.Highlights

  20:56 (IST)04 Jan 2020

  சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக 48 வழக்கறிஞர்கள் நியமனம்

  தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக 48 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

  20:54 (IST)04 Jan 2020

  குழந்தைகள் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த அசாம் இளைஞர் கோவையில் கைது

  பாலக்காடு சாலையில் டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் இளைஞர் ரெண்டா பாசுமடாரி குழந்தைகள் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்ததற்காக கோவையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  20:50 (IST)04 Jan 2020

  சட்டப்பேரவைத் தனபால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு

  தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடவுள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டபேரவைத் தலைவர் தனபால் நேரில் சந்தித்து சட்டபேரவையில் உரை நிகழ்த்த முறைப்படி அழைப்பு விடுத்தார்.

  18:59 (IST)04 Jan 2020

  ஹெச்.ராஜா மீது புகார்

  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என பேசிய விவகாரத்தில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, நடவடிக்கை கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த புகாரில், ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதுதொடர்பாக அவரை கைதுசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்களை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு கண்டம் தெரிவித்தனர்.

  18:41 (IST)04 Jan 2020

  ஆபாச படம் பார்த்தவர் கைது

  கோவையில் குழந்தை ஆபாச படம் பார்த்தவர் கைது

  அசாம் மாநிலத்தை சேர்ந்த ரென்டா பாசுமாடரி என்பவர் கைது

  18:40 (IST)04 Jan 2020

  இர்பான் பதான் ஓய்வு

  அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அறிவிப்பு

  18:08 (IST)04 Jan 2020

  கருத்து சொல்ல விரும்பவில்லை - கோலி

  குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

  17:09 (IST)04 Jan 2020

  ஜல்லிக்கட்டு போட்டி

  ஜல்லிகட்டு போட்டிகள் நடத்த இதுவரை 13 மாவட்டங்கள் பதிவு செய்துள்ளன, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 750 காளைகள் வரை போட்டியில் பங்கேற்க பதிவாகியுள்ளன என்று உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்

  16:52 (IST)04 Jan 2020

  ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் பெயரை பயன்படுத்தத் தடை

  ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் பெயர் மற்றும் வணிக சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்பூர் பிரியாணி எனவும் ஸ்டார் பிரியாணி எனவும் சென்னையில் பல கடைகள் இயக்கி வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி ஒரிஜினல் கடையின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  

  16:31 (IST)04 Jan 2020

  ஆருத்ரா தரிசனத்திற்கு 100 சிறப்புப் பேருந்துகள்

  சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனத்திற்காக ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

  16:16 (IST)04 Jan 2020

  கோத்தபய ராஜபக்ச உறுதி

  தனது ஆட்சிக் காலத்திற்குள் தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்து ஒற்றையாட்சியை பாதுகாத்து பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

  15:55 (IST)04 Jan 2020

  மாநில தேர்தல் ஆணையர் தகவல்

  முந்தைய தேர்தல்களை விட மிக அமைதியான முறையில் இரு கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

  15:41 (IST)04 Jan 2020

  கமலுக்கு ஸ்டாலின் வாழ்த்து

  நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து, வாழ்த்து அட்டை அனுப்பினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

  15:08 (IST)04 Jan 2020

  மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் கொரியன் படத்தின் காப்பியா

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும், மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஆனால், அது 'சைலன்ஸ்டு' என்ற கொரியன் படத்தின் தழுவல் என பரபரத்து கிடக்கிறது இணைய வெளி. 

  14:47 (IST)04 Jan 2020

  குருத்வாரா தாக்குதல்

  பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருக்கும் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது, மதவெறி ஆபத்தானது என்றும் அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்றும் ராகுல்காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  14:43 (IST)04 Jan 2020

  சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியவர் - ஸ்டாலின்

  முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியவர் பி.எச். பாண்டியன் என்றும் கருத்து.

  14:41 (IST)04 Jan 2020

  காலி பணியிடங்கள் குறித்த அறிக்கை

  புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியின் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  14:39 (IST)04 Jan 2020

  ஆசிட் வீச்சில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி

  நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் குற்றச்செயல்களை தடுக்க முற்பட்ட காவலர்கள் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசினர். இதில் காயமடைந்த இரண்டு காவலர்களுக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார் முதல்வர். காயமடைந்த பொதுமக்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  13:28 (IST)04 Jan 2020

  நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசு முடிவுக்கு எதிராக தமிழக அரசு மனு

  நீட் தேர்வினை கட்டாயமாக்கிய 2017, 2018ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

  12:54 (IST)04 Jan 2020

  பி.எச். பாண்டியன் உடலுக்கு அஞ்சலி

  சென்னை அண்ணா நகரில் வைக்கப்பட்டிருந்த பி.எச். பாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

  12:52 (IST)04 Jan 2020

  10ம் தேதி வரை நியாய விலைக்கடைகள் இயங்கும்

  பொங்கல் பரிசு வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் வருகின்ற 10ம் தேதி வரை நியாய விலைக்கடைகள் அனைத்தும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கான பொங்கல் பரிசினை தங்கு தடையின்றி வாங்கிக் கொள்ளலாம்.

  12:23 (IST)04 Jan 2020

  முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவு - தலைவர்கள் இரங்கல்

  முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் இரங்கல்களை பதிவு செய்துள்ளனர். மேலும் ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தங்களின் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

  12:07 (IST)04 Jan 2020

  தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஜல்லிக்கட்டு

  வருகின்ற 17ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டினை காணும் வகையில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  12:01 (IST)04 Jan 2020

  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையர்

  ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 6ம் தேதி காலை பதவி ஏற்பார்கள் என்றும் எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் மிகவும் அமைதியாவும், 100% நேர்மையாகவும் நடைபெற்றது என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

  11:53 (IST)04 Jan 2020

  தேமுதிக இரங்கல்

  முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவுக்கு தேமுதிக கட்சியினர் தங்களின் இரங்கல்களை ட்விட்ட்ர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

  11:21 (IST)04 Jan 2020

  பெட்ரோல் டீசல் விலை விலை உயர்வு

  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து ரூ. 78.39க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 16 காசுகள் அதிகரித்து ரூ. 72.28க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  11:18 (IST)04 Jan 2020

  தங்கத்தின் விலை மேலும் உயர்வு

  சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 136 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 30,656க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  11:08 (IST)04 Jan 2020

  பி.எச். பாண்டியன் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

  தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், பி.எச். பாண்டியனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தென் தமிழக மக்களின் வலுவான பிரதிநிதியாகவும், சபாநாயகராவும் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தியவர் என்றும் புகழாரம்.

  10:53 (IST)04 Jan 2020

  பி.எச். பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

  முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய பேரிழப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். 

  10:48 (IST)04 Jan 2020

  பேசினாலே குற்றம் என புது சட்ட நெறிகள் - ப. சிதம்பரம் விமர்சனம்

  நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்ததை தொடர்ந்து அவர் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை விமர்சனம் செய்யும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் சிதம்பரம். அதில் பேசினாலே குற்றம் என்ற புதிய சட்ட நெறிகள் புகுத்தப்படுகிறது. பேசுவதே குற்றம் என்றாலும், 14 நாள் விசாரணை கைதியாக ஏன் அடைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  10:39 (IST)04 Jan 2020

  மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம்

  சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் - 117.11 அடியாக உள்ளது. மொத்த நீர் இருப்பு - 88.93 டிஎம்சி ஆகும். நீர்வரத்து - 1,526 கனஅடியாகவும், நீர் திறப்பு - 10,000 கனஅடியாகவும் உள்ளது.

  10:38 (IST)04 Jan 2020

  ஈரோடு கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

  ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே அமைந்திருக்கும் கொடிவேரி தடுப்பணை சமீபத்தில் பெய்த மழையால் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  10:37 (IST)04 Jan 2020

  குடிமைப்பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி - முதல்வர் கருத்து

  குடிமைப்பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிகவும் முக்கியமானது என்றும், விளையாட வயது ஒரு தடையில்லை என்றும் அவர் அப்போது கூறினார்.

  கேட் தேர்வு 2020 அட்மிட் கார்டுகள் வெளியீடு

  கிராச்சுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட்  எனப்படும் ‘கேட்’ தேர்வு பிப்ரவரி 1, 2, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு பதிவு செய்திருக்கிற 8.6 லட்சம் பேருக்குமான ’அட்மிட் கார்டு’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அட்மிட் கார்டில் தேர்வு நடக்கும் இடம், நேரம், பாடக் குறியீடு போன்ற தேர்வு சார்ந்த விபரங்கள் இருக்கும்.  இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

  Tamil Nadu
  Advertisment

  Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

  Follow us:
  Advertisment