Advertisment

உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்கு: 'பேன்டமிக்' விதிகளை மீறியதாக புகார்

சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.கவினர் பங்கேற்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Case Filed Against Udhayanidhi Stalin and DMK youth wing members

உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் இளைஞரணி நேற்று கோவையில் போராட்டம் நடத்தியது. இதனை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தினார். தற்போது உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா?

கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பெயர் இல்லாமல் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனை கிழித்தற்காக 12 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில், ஆர்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.கவினர் பங்கேற்றனர்.

முகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்

இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஆர்பாட்டத்தின்போது அத்துமீறி மேடை அமைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"சட்டவிரோதமாக ஒன்று கூடி தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளை மீறியதாக" ரேஸ் கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சமூக விலகலை பராமரிக்காமல், முககவசம் அணியாமலும் போராட்டக்காரர்கள் கலந்துக் கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

உதயநிதி கிராமப்புற மாணவர்களிடையே நீட் பற்றிய தவறான தகவல்களையும் பரப்பியதாகவும், அவர் மீதும் பிற திமுக தலைவர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், போலீஸார் தெரிவித்தனர்.

பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 143, 269, 341, 504 மற்றும் 505 (i) (பி) பிரிவுகளின் கீழ் உதயநிதி, சிங்கநல்லூர் எம்.எல்.ஏ என்.கார்த்திக், பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம், உள்ளிட்ட பலர் மீது ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Dmk Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment