ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது மதுபிரியர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்துவதால், கடைகளை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை சூளைமேடு சேர்ந்த வசந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான தகவல்; ஊடகங்கள் மீது நடவடிக்கை - அரசு பதிலளிக்க உத்தரவு
அந்த மனுவில், திடீரென மது அருந்துவதை நிறுத்தும் போது, இதயத்துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், மூளையை பாதிக்கச் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல இடங்களில் மதுபான கடைகள் உடைக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் 22 சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கள்ளச்சந்தையில் மது பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மதுபான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் கள்ளச்சாராயம், மெத்தனால் மற்றும் வார்னிஷ்களை குடித்து சிலர் மரணமடைந்துள்ளதால், டாஸ்மாக் கடைகளை குறைந்தபட்ச நேரத்துக்கு திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி - திமுக தோழமைக் கட்சி கூட்டத்தின் 8 தீர்மானங்கள்
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பங்கேற்கும் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்று நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.