/tamil-ie/media/media_files/uploads/2022/08/cheetah.jpg)
Cheetah captured by forest department in Nilgiris: உதகையில் சிறுமியை கொன்ற கூண்டில் பிடிபட்ட பெண் சிறுத்தை முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது.
உதகை அருகே மைனலை அறக்காடு பகுதியில் கடந்த பத்தாம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை சிறுத்தை தாக்கியது.
இதையும் படியுங்கள்: கோவை உக்கடத்தில் போக்குவரத்து மாற்றம்
இதில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டு பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்களை பொருத்தினர்.
கேமராவின் சிறுத்தை பதிவானதை எடுத்து நேற்றைய தினம் அந்த பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.
இன்று அந்தக் கூண்டில் சிறுத்தை சிக்கியதையடுத்து வனத்துறையினர் பிடிபட்ட சிறுத்தையை முதுமலை வனப்பகுதிக்குள் விட்டனர்.
உதகையில் சிறுமியை கொன்ற சிறுத்தை; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் முதுமலை காட்டில் விட்டனர் pic.twitter.com/JfrvrD9CFG
— Indian Express Tamil (@IeTamil) August 20, 2022
கூண்டில் பிடிபட்டது 4 லிருந்து 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்றும் முதுமலை வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us