சிறுமி பாலியல் வழக்கில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு .. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

ஒவ்வொரு நபரையும், அவரது பெயரை சொல்லி அடையாளம் காட்டியிருக்கிறார்.

By: Updated: July 18, 2018, 11:53:39 AM

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 11 வயது சிறுமி 15 பேரால் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்க ஊசி போதை ஊசி போட்டும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்பலமானது.
இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றவாளிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் ஆயத்தமாயினர்.

குற்றவாளிகளுக்கு தர்ம அடி கொடுத்த வழக்கறிஞர்கள்

அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் 17 பேர் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 17 பேரையும் பத்திரமாக மீட்டு வேனில் அமர வைத்தனர். அப்போதும் வழக்கறிஞர்கள் வேனை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி, விசாரணையின் போது ஒவ்வொரு நபரையும், அவரது பெயரை சொல்லி அடையாளம் காட்டியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே தனியார் குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு சேவை வழங்கிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடந்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 17 பேரை தவிர 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று விசாரணையில் அதிர்ச்சியோட்டும் தகவல்கள் வெளியாகின.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai 11 years old girl sexual abuse case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X