சென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…

கடந்த ஆண்டை விட அதிக அளவில் பார்வையாளர்கள் இம்முறை புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Book Fair 2019
Chennai Book Fair 2019

Chennai Book Fair 2019 : அதிகரித்து வரும் வாசகர்கள்… மகிழ்ச்சியில் பதிப்பகத்தார்கள்.  இந்த வருடம் 17 நாட்கள் புத்தக கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் பொங்கல் விடுமுறையின் காரணமாக, நிறைய மக்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர்.

Chennai Book Fair 2019 – ஒரே நாளில் 60,000 பேர் வருகை

நேற்று மட்டும் (14/01/2019) சுமார் 60,000 பார்வையாளர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர்.  சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகப்படியான வாசகர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருவார்கள் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ( Booksellers and Publishers Association of South India (BAPASI) ) வைரவன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மற்றும் சுமார் 12 லட்சம் வாசகர்கள் / பார்வையாளர்கள் இந்த கண்காட்சிக்கு வந்துள்ளனர். இன்ந்த முறை இதன் இரட்டை மடங்கை அடைவது தான் குறிக்கோள் என்று கூறியிருக்கிறார் அவர்.

விடியல் பதிப்பகத்தின் அம்பேத்கார் இன்றும் என்றும், 5 நாட்களில் மட்டும் 3000 பிரதிகள் கடந்த முறை விற்று சாதனை படைத்தது. இம்முறையும் அதே போன்ற சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள நீலம் புத்தக அரங்கம் மக்களை கவரும் வண்ணத்தில் இருக்கிறது. தங்களின் சொந்த பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், பெரியாரின் படைப்புகள், மற்றும் இதர பதிப்பகத்தாரின் புத்தகங்களை இங்கு விற்பனைக்கு வைத்துள்ளனர்.

மேலும் படிக்க : சென்னை புத்தக கண்காட்சி : இந்த வருடம் சிறப்பு பெற்ற பதிப்பகத்தாரின் நூல்கள் என்னென்ன ?

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai book fair 2019 60000 people visited book fair single day

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com