Covid 19, Chennai Cases: கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது தமிழகத்தின் தலைநகரான சென்னை. செய்திகளில் மட்டுமே கொரோனா நோயாளிகளைப் பற்றி படித்துக்கொண்டிருந்தவர்கள், இப்போது தங்கள் தெருவில், பக்கத்து வீட்டிலுள்ள நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிய நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படும் நிலையில், மேலும் பல லட்சம் பேருக்குத் தொற்று இருக்கவும், ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
விஜய் டிவியின் ஒன் மேன் ஆர்மியாக வலம் வரும் தீனா.. எப்படி இந்த வளர்ச்சி?
அதன் விளைவாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், சென்னையிலிருந்து வருபவர்களை வேறு மாதிரியாகக் கையாளத் தொடங்கிவிட்டது. ஆரம்ப காலங்களில் ஒருவர் எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அவரது இ-பாஸ் விண்ணப்பத்தை அனுமதிக்கிற அதிகாரம் அவர் குடியிருக்கிற மாவட்ட நிர்வாகத்திடமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்த அதிகாரம் அவர் எந்த மாவட்டத்துக்குச் செல்கிறாரோ அந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது சேலத்திலிருந்து, செங்கல்பட்டிற்கு ஒருவர் செல்ல வேண்டும் என்றால், அவரது விண்ணப்பத்தை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டுமே தவிர, சேலம் இல்லை. இந்த நடைமுறை மாற்றம் சென்னைவாசிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததுமே சென்னையிலுள்ள பல கம்பெனிகள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கின. இதனால் வெளி மாவட்ட ஆட்கள், சொந்த ஊர் நோக்கி பயணமாகினர். இருப்பினும் சில நாட்களில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் சென்னையிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் சொந்த வாகனம் வைத்திருப்பவர்களும், பெரும் தொகையை வாடகையாக செலுத்த முடிந்தவர்களும் இ பாஸ் பெற்றுக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு கிளம்பினர். ஆனால் இப்போது இருக்கும் சூழலில் சென்னையிலிருந்து யார் எந்தக் காரணத்திற்காக, சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வேண்டி விண்ணப்பித்தாலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்து விடுகின்றன.
திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைக்கே இந்த நிலை என்றால், ‘2 மாதமாக அலுவலகம் செல்ல முடியவில்லை. எனவே சொந்த ஊர் திரும்புகிறேன்’ என்கிற கோரிக்கையை எல்லாம் எப்படி அணுகுவார்கள் என்று சொல்லவே வேண்டாம்? விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம், ‘சிவப்பு மண்டலத்திலிருந்தும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தும் வெளியேற யாருக்கும் அனுமதி இல்லை’ என்பதுதான்.
இது ஒருபுறம் இருக்க இ-பாஸ் வாங்கிக்கொண்டோ, வாங்காமலோ சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு வருவோரை அந்தந்த மாவட்டங்கள் வேறு மாதிரி நடத்துகின்றன. இ-பாஸைக் காட்டியோ, அல்லது நானும் அரசு ஊழியர்தான் என்று சொல்லியோ ஒவ்வொரு மாவட்ட எல்லையையும் எளிதாகக் கடந்துவரும் அவர்கள், தங்களது சொந்த மாவட்டத்துக்குள் நுழையும்போது தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்கள் இவ்விஷயத்தில் மிகக் கடுமையாக நடந்துகொள்கின்றன. சென்னையிலிருந்து வருபவர்களைச் செக்போஸ்ட்டில் பிடித்தவுடன் அவர்களை அருகிலேயே ஒரு வீட்டிலேயோ, கல்லூரியிலேயோ தனிமைப்படுத்திவிடுகிறார்கள். கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்து, பரிசோதனை முடிவு வரும் வரையில் அவர்கள் அந்த முகாமில்தான் இருந்தாக வேண்டும். பரிசோதனைக்கான மாதிரியை எடுத்துவிட்டால் 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவு வந்துவிடும். ஆனால், பரிசோதனை மாதிரி எடுப்பதற்கே இரண்டு மூன்று நாட்களாகிவிடுகின்றன. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்களின் நிலை மிகவும் கடினமாகியிருக்கிறது. இப்போதைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து யாரும் சென்னைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் சென்னையிலிருந்து வெளியில் வர முடியாமல், நகரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தவிர, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் விட்டு மண்டலம் சென்றால், இ-பாஸ் அவசியம், மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை, என தமிழக அரசு அறிவித்தது. அதோடு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்றால் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.
ஊரடங்கு ஒருபுறம், ஓடிடி மறுபுறம்: இனி சினிமா தியேட்டர்களின் எதிர்காலம்?
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பத்திரப்பதிவு டோக்கன்களை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரப்பதிவு ஆவணத்தை ஆதாரமாக பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”