காதல் வசனம்… ஆடியோவில் சிக்கிய சென்னை மாநகராட்சிப் பொறியாளர்

“உன் “டிக் டாக்” வீடியோ எல்லாம் பார்த்து ரசிப்பேன்.. உன்னை, என் ஹையர் ஆபீசர்ங்க கிட்ட பேசி நான் தான் இந்த வேலையில் உட்கார வெச்சேன்”

Chennai Corporation Engineer Love Talk with Volunteer
Chennai Corporation Engineer Love Talk with Volunteer

கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலராக ஈடுபட்டு வந்த மாணவிக்கு காதல் வலை வீசிய, சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காலையில் கருவேப்பிலை ஜூஸ்: அட, இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே!

சென்னையில், கொரோனா தொற்றைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக வீடு வீடாகப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தன்னார்வலப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகியிருக்கும் ராயபுரம் மண்டலத்தில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார், அந்த கல்லூரி மாணவி.

தம்புச் செட்டித் தெருவில் உள்ள மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றும் நபர், மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிக்கு அடிக்கடி போன் செய்து, ”நீ அழகாக இருக்கிறாய். உன்னை எனக்குப் பிடிக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு உன்னைப் பார்த்திருந்தால் நீ என் வொய்ஃப் ஆகியிருப்ப” என உருகி உருகி தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவிக்கு ஃபோன் செய்த உதவி பொறியாளர் இவ்வாறு பேசுகிறார்.

உதவி பொறியாளர்: உன்னை பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியில… எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு.

மாணவி: சார் நீங்க பேசுவது எனக்கு புரியல.. என்கூட வேலை பார்க்கிற எல்லாருக்குமே என்னை பிடிக்கும். எனக்கும் அவர்களை பிடிக்கும்.

உதவி பொறியாளர்: உன்னை எனக்கு வேற விதமாக பிடிச்சிருக்கு.. அர்த்தம் புரிலையா?

மாணவி: நீங்க சொல்றது புரியவில்லை.. என்ன அர்த்தத்தில் சார் நீங்கள் சொல்றீங்கனு எனக்கு தெரியலை சார்.

உதவி பொறியாளர்: காலேஜ்ல 2-ம் வருஷம் படிக்கிற. உன்னை விரும்புறேன்னு சொல்றேன்… அர்த்தம் உனக்கு புரியலையா.

மாணவி: சார் புரியும்படி சொல்லுங்க.

உதவி பொறியாளர்: 2 வருஷத்துக்கு முன்பு நான் உன்னை பார்த்து இருந்தால், நீ எனக்கு இந்நேரம் வொய்ப் ஆகியிருப்பே.. உன்னை தான் கல்யாணம் முடித்திருப்பேன்.

மாணவி: சார்.. இப்படியெல்லாம் சொல்லி என்னை கலாய்க்காதீங்க சார்.

உதவி பொறியாளர்: உன் “டிக் டாக்” வீடியோ எல்லாம் பார்த்து ரசிப்பேன்.. உன்னை, என் ஹையர் ஆபீசர்ங்க கிட்ட பேசி நான் தான் இந்த வேலையில் உட்கார வெச்சேன்…

மாணவி: சார் வீட்ல ஆட்கள் இருக்காங்க, என்று சொல்லி செல்போனை கட் செய்து விடுகிறார்.

ஆனாலும் விடாமல் அந்த பொறியாளர் மீண்டும் மீண்டும் ஃபோன் செய்ய, அவர் பேசியதை அந்த மாணவி ரெக்கார்ட் செய்துவிட்டார். பின்னர் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் புகாரளித்தார் அந்த மாணவி. தொடர்ந்து சென்னை எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் புகாரளித்தார்.

சீனாவிடமிருந்து நிதியுதவியை பெற்றதா ராஜீவ் காந்தி பவுண்டேசன்? – ஆராய விசாரணைக்குழு அமைப்பு

புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். தன்னார்வலப் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிக்கு மாநகராட்சி உதவிப் பொறியாளர் காதல் தொல்லை அளித்த விவகாரம் சென்னை மாநகராட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையை அடுத்து, உதவி பொறியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai corporation engineer love talk with female volunteer

Next Story
சாத்தான்குளம் விவகாரம் – மேலும் 5 போலீசார் கைதுsathankulam cudtodial death, Jeyaraj and fenix death, thoothukudi, sathankulam police station, cbcid enquiry, arrest, interrogation, police, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express