மக்களுக்கு இடையூறாக பேனர்களை பொது இடங்களில் இனிமேல் வைக்கக் கூடாது - உயர் நீதிமன்றம்

இந்த தடையினை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு

Chennai High Court Bans Banners : பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதை அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.

பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்கள் கலாச்சாரத்தை எதிர்த்து எண்ணற்ற பொதுநல வழக்குகள் நீதிமன்றங்களில் பதிந்தும், அதற்கு தீர்ப்புகள் கொடுத்தும் எதையும் சரியாக பின்பற்ற இயலவில்லை.

சமீபமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, கருணாநிதி சிலை திறப்பு விழா, ரஜினி காந்த் பிறந்தநாள் விழாக்களின் போது, விதிமுறைகளை மீறி, ஏரளமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது.இதனை விசாரிக்கும் பொருட்டு, டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்தார். இதனை திங்கள் கிழமையன்று (17/12/2018) உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரணை செய்தனர்.

Chennai High Court Bans Banners : ஒரே மாதிரிகளை பதில்களை படித்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள்

அப்போது, விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாத அதிகாரிகள் தங்களின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விருப்பமான கட்சியில் இணைந்து கட்சிப்பணி ஆற்றுங்கள் என்று கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க : விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாத அதிகாரிகள் தங்களின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விருப்பமான கட்சியில் இணைந்து கட்சிப்பணி ஆற்றுங்கள்

இந்த வழக்கு இன்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதனைப் படித்து பார்த்த நீதிபதிகள் 2006ல் இருந்தே இதைத்தான் கூறிக் கொண்டு வருகிறீர்கள் என்று தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர்.

பின்பு, மக்கள் நடந்து செல்வதிற்கும், வாகனங்கள் ஓட்டுவதற்கும் இடையூறாக பேனர்கள் வைக்கக்க் கூடாது என்று கூறினர். பின்பு, பொது இடங்களில் பேனர் வைக்க தடை விதிக்கப்படுவதாகவும் இந்த உத்தரவினை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close