Advertisment

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

காஷ்மீரைப் போல தமிழகத்தை பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் பதிலளிக்க முடியாது - நீதிபதிகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court dismissed petition against Jammu Kashmir reorganization act

Chennai high court dismissed petition against Jammu Kashmir reorganization act

Chennai high court dismissed petition against Jammu Kashmir reorganization act 2019 : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசின் சட்டத்திருத்தை ரத்து செய்ய கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு. ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநில சட்டமன்றத்தின் அனுமதி பெறாமல் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றியது.

Advertisment

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அந்த மனுவில், காஷ்மீரைப் போல பிற மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களாக சுருக்கும் அபாயம் இருப்பாதாகவும், மாநிலங்களை அம்மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், யூனியன் பிரேசமாக மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறியுள்ள மனுதாரர், மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாச்சி கொள்கைக்கு விரோதமாக இயற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு தடை விதித்து செல்லாது என அறிவிக்க கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? இல்லையா? என்பது குறித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரைப் பிரித்தது போல தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

காஷ்மீரைப் போல தமிழகத்தை பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் பதிலளிக்க முடியாது எனவும், யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வாய்ப்புள்ளதாக எந்த மாநிலமும் அச்சம் தெரிவிக்கவில்லை எனவும், யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதிகள் சத்தியநாரயணன்,சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசு சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும்,  வழக்கு தொடர்ந்தவர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர் அல்லது அந்த மாநில குடிமகன் அல்ல மேலும் இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை. ஏற்கனவே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இதுசம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசு சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவே மனுவை தள்ளுபடி செய்வதற்காக உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க :யூனியன் பிரதேசங்களாக மாறியது ஜம்மு – காஷ்மீர்… மாற்று அரசியலை உருவாக்கும் முனைப்பில் டெல்லி!

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment