Advertisment

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

Tamil Nadu local body election : ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி தனியாக வாக்கு எண்ண சட்ட ரீதியாக தடையில்லை என தெரிவித்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க தடை கோரிய மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu local body election result chennai high court dismissed petition

Tamil Nadu local body election result chennai high court dismissed petition

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

இது தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொது செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில், 1996 முதல் 2011 வரை நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல்களில் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டன, தற்போது நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமான என குறிப்பிட்டுள்ளார்.

ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தல் முடிவுகள் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை தாக்கத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்

மேலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தபட்ட தேர்தல் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அதற்கு பதிலளித்த ஆணையம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும், தற்போதய தேர்தல் முடிவுகளை வெளியிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டாலும், எண்ணிக்கை ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவதையும் மனுவில் சுட்டிக்காட்டி எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தபட்ட தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள், எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் முடிவுகளை அறிவிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தலை 3 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க உச்சநீநிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இரண்டு கட்டமாக தேர்தல் முடிவுகளை வெளியிட சட்ட ரீதியாக எந்ந தடையும் இல்லை எனவே தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி தனியாக வாக்கு எண்ண சட்ட ரீதியாக தடையில்லை என தெரிவித்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க தடை கோரிய மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment