ஏழைக் குழந்தைகளுக்கு சத்துணவு: திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, government school mid day meal

corona virus, lockdown, government school mid day meal

ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisment

பணியை சிறப்பாக செய்ததால் ராஜினாமா; அமைச்சர் மகனை கேள்வி கேட்டதற்கு வெகுமதி!

கொரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச முட்டைகள் வழங்கவும், ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏழை மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார்.

அதேபோல, தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 243 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

இதனை கேட்ட நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, இந்த மனு தொடர்பாக ஜூலை 20 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: