நீட் தேர்வு அச்சம் காரணமாக, தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்தது.
எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக, மதுரை மாணவி ஸ்ரீ தேவி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மாணவர் மோதிலால் ஆகிய மூன்று மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சூரியபிரகாசம் எனும் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று கருத்து தெரிவித்தது.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? தலைமை நீதிபதிக்கு கடிதம்
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக முதல்வரும், துணை முதல்வரும் ஆறுதல் தெரிவித்தனர்.
திமுக சார்பில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கநிலை காரணமாக, நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி, தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil