நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளில், குற்றவியல் அவமதிப்பைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது” என நீட் மரணங்கள் குறித்த தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் சூர்யா.
My heart goes out to the three families..! Can’t imagine their pain..!! pic.twitter.com/weLEuMwdWL
— Suriya Sivakumar (@Suriya_offl) September 13, 2020
சூர்யாவின் இந்த விமர்சனத்துக்கு எதிர்வினையாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறை மதிப்புக்குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை ; 10 ஆயிரம் இந்தியர்களை வேவு பார்க்கும் சீனா!
”எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும்” எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Contempt court case against suriya sivakumar juctice sm subramaniam
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!