கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர், தலைநகரை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். எனவே, வெளிமாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் எளிதில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் செங்கல்பட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதுதவிர உரிமம், தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.
வாகனங்களைப் பயன்படுத்தினால் பறிமுதல், 2 கிமீ தாண்டி செல்லத் தடை: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
கடந்த மூன்று நாட்களில் சரியான பாஸ் இல்லாமல் செங்கல்பட்டு மாவட்டத்தை கடக்க முயன்ற 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்களையும் செங்கல்பட்டு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த மூன்று நாட்களில் சென்னை-செங்கல்பட்டு எல்லையில் கிட்டத்தட்ட ஆறு சோதனைச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நின்றன. "முக்கிய சோதனைச் சாவடிகள் முத்துக்காடு, ஓஎம்ஆர்,வண்டலூர், பரணூர் டோல் பிளாசா மற்றும் நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு டோல்கேட்" என்று செங்கல்பட்டு எஸ்.பி., டி.கண்ணன் கூறினார்.
சரியான இ-பாஸ் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகிறது. அது இல்லாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சராசரியாக, பைக்குகள், கார்கள் உட்பட சுமார் 400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“குடும்பமாக வருகிறார்கள் என்றால், நாங்கள் அபராதம் விதித்து அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பிவிடுவோம். குறுக்கு சாலைகள் வழியாக செல்ல முயற்சிப்பவர்களையும் தடுக்க போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது”என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறினார்.
ஒவ்வொரு சோதனைச் சாவடியையும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு நிர்வகிக்கிறது என்று அவர் கூறினார். “மக்கள் தேவையின்றி நகரத்திலிருந்து வெளியே செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தால், பாஸ்இல்லாவிடில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
பாஸ்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சரிபார்க்க காவல்துறையினரும் பாஸை முழுமையாக சோதித்து வருகிறார்கள். போட்டோஷாப் செய்யப்பட்ட பாஸைப் பயன்படுத்தி மக்கள் வெளியேற முயற்சிப்பது பற்றிய தகவல் எங்களிடம் உள்ளது, நாங்கள் அவர்களையும் கண்காணித்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை: 33 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
இதற்கிடையில். திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் இ-பாஸ் இல்லாத 1,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "இந்த முறை லாக் டவுன் மிகவும் கண்டிப்பாக இருக்கும். மருத்துவ அவசரநிலைகளைத் தவிர, மக்கள் இரு சக்கர வாகனம் அல்லது கார்களைப் பயன்படுத்தக்கூடாது" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
அதேசமயம், அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் சரிபார்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. "சரியான சோதனை இல்லாமல் பலர் எல்லை கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இ-பாஸ் இல்லாமல் பல வாகனங்களும் சென்னைக்கு வருகின்றன" என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.