chennai lockdown corona : சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் வீட்டுக்கு வந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் போது உங்கள் விவரங்களை இனி ஜிசிசி ஆப் மூலம் பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் உங்கள் புகைப்படத்தையும் அதில் பதிவேற்றுவார்கள் என்று சென்னை மாந்கராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே வ்ருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோnaa நோய் தாக்கம் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. பரிசோதனையை அதிகரித்து, நோயாளிகளை அடையாளம் கண்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது . சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனாவை விரட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் நாட்களில் மாநகராட்சி சார்பில் வீட்டுக்கு சென்று பொதுமக்களுக்கு கொரோனா நோய் அறிகுறி டெஸ்ட் செய்வது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
— Greater Chennai Corporation (@chennaicorp) June 14, 2020
வீட்டிற்கு வரும் மாநகராட்சி ஊழியர்கள் தெர்மா மீட்டர் மற்றும் ஜிசிசி கொரோனா மோனிட்டரிங் என்ற ஆப் உடன் வருவார்கள் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புகைப்படமும் எடுத்து மற்ற விவரங்களை வேகமாக அந்த ஆப்பில் பதிவு செய்வார்களாம்.
இதன் மூலம் ஊழியர்கள் விரைவாக அடுத்தடுத்த வீடுகளில் சோதனைகளை முடிக்க எனவும், அனைத்து விவரங்களையும் ஆப் மூலம் பதிவு செய்வது மீண்டும் மீண்டும் சோதித்து பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் 14,000 தெர்மா மீட்டர்கள் ஊழியர்கள் வழங்கப்படவுள்ளன.
இதனை மூத்த அதிகாரிகள் தினமும் கவனித்து சரிப்பார்ப்பார்கள் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த பணிக்காக தற்போது 13,000 பணியாளர்கள் பணி நியமிக்கப்பட்டுள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”