கொரோனாவால் திண்டாடும் சென்னை – தலைநகருக்கு படையெடுத்த மருத்துவர்கள்
சென்னையில் கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டியிருக்கும் சூழலில், அவசரகால நிலையை சமாளிக்கும் பொருட்டு 200 முதுகலை (பி.ஜி) மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட 50 செவிலியர்கள் தமிழகத்தின் கோவிட் -19 ஹாட்ஸ்பாட் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். மதுரை உட்பட தென் மாவட்டங்களில் மருத்துவ ஊழியர்களுக்கு…
corona in chennai, corona in tamil nadu, corona virus, covid 19 in chennai, chennai lock down, கொரோனா வைரஸ், சென்னையில் கொரோனா, தமிழகத்தில் கொரோனா
சென்னையில் கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டியிருக்கும் சூழலில், அவசரகால நிலையை சமாளிக்கும் பொருட்டு 200 முதுகலை (பி.ஜி) மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட 50 செவிலியர்கள் தமிழகத்தின் கோவிட் -19 ஹாட்ஸ்பாட் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
மதுரை உட்பட தென் மாவட்டங்களில் மருத்துவ ஊழியர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்பதனால் அவர்கள் சென்னைக்கு அனுப்பப்படுகின்றனர். ஒருவேளை பாதிப்புகள் அதிகரித்தால், மருத்துவர்கள் அங்கு திரும்பி வேலைக்கு வர வேண்டியிருக்கும்.
தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.செந்தில் TOI-யிடம் கூறுகையில், மதுரை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 180 முதுகலை மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
“கிட்டத்தட்ட அனைவரும் மறுநாள் மாலை 4 மணியளவில் சென்னை அடைந்தனர், அவசரகால சூழ்நிலையைச் சமாளிக்க தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தியும் வந்தனர். பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு மருத்துவர்கள் தேவை என்ற எதார்த்தத்தை உணர்ந்து, அவர்கள் ஒத்துழைத்தனர்” என்றார்.
“இப்போதைக்கு, பி.ஜி மருத்துவர்களின் சேவை மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது, ஆனால் அடுத்த 10 நாட்கள் முக்கியமானவை. மதுரையில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எங்களுக்கு நிச்சயமாக அதிக மருத்துவர்கள் தேவைப்படும்” என்றார்.
இதற்கிடையில், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 50 செவிலியர்களும், தற்காலிகமாக மாநில அரசால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட கூடுதல் 2,000 செவிலியர்களும் திங்கட்கிழமை அதிகாலை சென்னைக்கு புறப்பட்டனர். மதுரை மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேருந்தில் செவிலியர்கள் புறப்பட்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் தங்கள் பணிக்கான ரிப்போர்ட் கொடுப்பார்கள். இருப்பினும், இதுவரை, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் ஏற்கனவே பணியாற்றும் எந்த செவிலியரும் சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பணிபுரிய நியமிக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“