சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கோவிட் -19, கொரோனா தொற்றுக்கு, டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார். அவரின் கூற்றுப்படி, சூரிய கிரகணத்திற்குப் பிறகு உமிழும் ஆற்றல் காரணமாக அணு பிளவு ஏற்பட்டு, அந்த துகள்கள் பரிணாமத்தின் மூலம் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாம்.
நீளவெட்டாக கேரளாவைக் கடக்க 4 மணி நேரம்தான்: அதிவேக அசத்தல் ரயில் திட்டம்
நியூக்ளியர் அண்ட் எர்த் சயிண்டிஸ்ட் டாக்டர் கே.எல்.சுந்தர் கிருஷ்ணா ANI ஊடகத்திடம், “டிசம்பர் 2019 முதல், கொரோனா வைரஸ் நம் வாழ்க்கையை அழிக்க தோன்றியது. எனது புரிதலின் படி, கடைசி சூரிய கிரகணம் நிகழ்ந்த டிசம்பர் 26-க்குப் பிறகு சூரிய மண்டலத்தில் புதிய சீரமைப்புடன் ஒரு கிரக உள்ளமைவு உள்ளது. ” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி, மனிதர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே நான் மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தன்னை மறு சீரமைத்துக் கொண்டுள்ளது தெரியவந்தது. டிசம்பர் 26, சூரிய கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் பூமியிலும் விழுந்தது. இந்த ஆற்றல் காரணமாக பூமியின் வலிமை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு காரணமாகப் பூமியின் மேல் பரப்பில் இந்த கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம். அந்த கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாக ஏற்பட்ட சேர்க்கைகள், அணுக்களின் பிளவு காரணமாக குறிப்பிட்ட நியூக்ளியஸ் உருவாக்கம் தொடங்கியிருக்கலாம். இப்படி வளிமண்டலத்தில் ஏற்பட்ட அணுசக்தி தொடர்பு, உயிரியக்கத்தின் கருவாக அமைந்திருக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பின் பிறழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
இந்த பிறழ்வு செயல்முறை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அங்கு தான் தோன்றியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கிருஷ்ணர் கூறினார். இது ஒரு சோதனை அல்லது வேண்டுமென்றே முயற்சியின் வெடிப்பாக இருக்கலாம்.
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
விஞ்ஞானியின் கூற்றுப்படி, வரவிருக்கும் சூரிய கிரகணம் (ஜூன் 21) நமக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கலாம். அப்போது வரும் சூரியக் கதிர்களின் தீவிரம் (பிளவு ஆற்றல்) வைரஸை செயலற்றதாக ஆக்கும். “இது கிரக கட்டமைப்பில் நடக்கும் இயற்கையான செயல் என்பதால் நாம் பீதியடைய வேண்டியதில்லை. இந்த வைரஸுக்கு சூரிய ஒளி மற்றும் சூரிய கிரகணம் தான் இயற்கையான தீர்வாக இருக்கும்” என்றும் கிருஷ்ணன் கூறினார்.
படம் உதவி – நன்றி ANI
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”