/tamil-ie/media/media_files/uploads/2022/12/Priya-America.jpg)
சென்னை வந்துள்ள அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகர மேயர் ரன் நிரன்பர்க் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை ரிப்பன் மாளிகையில் சந்தித்து பேசினார்.
சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் செவ்வாய்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் சான் ஆண்டோனியோ நகர மேயர் ரன் நிரன்பர்க், சான் ஆண்டோனியோ நகர முன்னாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் ஜூடித் ரவின், சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாண்புமிகு மேயர் திரு. @Ron_Nirenberg அவர்கள் தலைமையிலான குழுவினர் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு (Sister city affiliation) ஒப்பந்தங்களின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் @COSAGOV ஆகியவை இணைந்து செயல்படுவது... pic.twitter.com/Y7A93f7MD8
— Priya (@PriyarajanDMK) December 6, 2022
இதையும் படியுங்கள்: பூத் கமிட்டிகளை பலப்படுத்த திட்டம்… 2024 தேர்தல் பணிகளை தொடங்கிய தி.மு.க
இந்தச் சந்திப்பில் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு (Sister city affiliation) அடிப்படையில் அமெரிக்காவின் சான் ஆண்டோனியா நகரமும் சென்னை மாநகரமும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாகப் பேசப்பட்டது. இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரித்தார்.
குறித்த சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக ரிப்பன் கட்டட கூட்டரங்கில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாண்புமிகு மேயர் திரு.ரான் நிரன்பரக் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி மகிழ்ந்தோம். இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துணை மேயர்... pic.twitter.com/0oh6oZraGp
— Priya (@PriyarajanDMK) December 6, 2022
இந்நிகழ்வில் சான் ஆண்டோனியோ நகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு மேயர் பிரியா நினைவுப் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து சகோதரத்துவ நகரங்களின் இணைப்பாக 2 மாநகரங்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு விஷயங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும்வகையில் 2 மேயர்களும் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கை சான் ஆண்டோனியோ நகர மேயர் மற்றும் அவரது குழுவினர் பார்வையிட்டனர். அப்போது மண்டல நிலைக் குழுத் தலைவர்களை அமெரிக்க குழுவினருக்கு மேயர் பிரியா ராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.
முதன்மை செயலாளர் மற்றும் சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயர் திரு.பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதர் திருமதி ஜூடித் ரவின் உட்பட பலர் உடனிருந்தனர். pic.twitter.com/bzAOi3EdeH
— Priya (@PriyarajanDMK) December 6, 2022
பின்னர் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தை பார்த்த அமெரிக்க மேயர் மற்றும் குழுவினர் அதன் பராமரிப்பைப் பார்த்து வியந்தனர். பழமையான கட்டிடத்தை புதுப்பொலிவுடன் பராமரித்து வருவது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்டினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us