/tamil-ie/media/media_files/uploads/2018/12/FB_IMG_1499828118514-1.jpg)
Chennai Metro Rail 2nd Phase
Chennai Metro Rail Limited App : சென்னையின் புதிய அடையாளமாக உருமாறி வரும் மெட்ரோ தற்போது புதிய செயலி ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளது. ஓலா மற்றும் ஊபர் போல செயல்பட இருக்கும் இந்த செயலியை பயன்படுத்தி, மெட்ரோ ஸ்டேசன்களில் இருந்து, டாக்ஸியில் அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை அந்த செயலி தந்துவிடும்.
Chennai Metro Rail Limited App-ல் புதிய சேவை
எனவே மெட்ரோ ஸ்டேசனில் இருந்து இறங்கி, நீங்கள் டாக்ஸியில் ஏறி உங்களின் இருப்பிடத்தை நோக்கி சிரமம் இல்லாமல் பயணிக்கலாம். ஏற்கனவே செயல்பட்டு வரும் செயலியில், கேப் புக் செய்வதற்கான புதிய ஐகான் அங்கே உருவாக்கப்படும்.
பயணிகள் அதனை க்ளிக் செய்தால், டாக்ஸி சேவைகளுக்கான பக்கம் ஓப்பன் ஆகும். அப்பக்கத்தில் இருந்து பயணிகள் தங்களுக்கான டாக்ஸியை புக் செய்து கொள்ளலாம்.
மெட்ரோ ஸ்டேசனில் இருந்து இறங்கியவுடன், ஸ்டேசனில் இருந்து 5 கி.மீ சுற்றளவிற்குள் இருக்கும் இடங்களுக்கு தங்களின் விருப்பம் போல் பயணித்துக் கொள்ளலாம். இந்த ஆப் இன்னும் ஒரு மாதத்திற்குள் இம்ப்ளிமெண்ட் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை மெட்ரோ ஹெல்ப் லைனிற்கு (18604251515)போன் செய்து தங்களிற்கான டாக்ஸியை புக் செய்து கொள்ளலாம். ஆரம்ப காலக்கட்டங்களில் இந்த சேவையினை பயணிகள் பயன்படுத்த தயங்கினர். ஆனால் தற்போது நாள் ஒன்றிற்கு 70-80 அழைப்புகள் வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : அலுங்காம குலுங்காம சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டுமா ?
Chennai Metro Rail Limited App - கட்டண நிர்ணயம்
இந்த சேவைகளுக்கு 15 முதல் 20 ரூபாய் வரை தான் கட்டணம் வசூலிக்கப்படும். ஏற்கனவே இந்த பக்கங்களில் இருக்கும் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் கார் சேவைகள் இயங்கி வருவதால், இந்த கட்டணத்தையே நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது மெட்ரோ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.