Chennai Metro's SugarBox movie streaming app : சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து பரங்கி மலை மெட்ரோ வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் மெட்ரோவில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம். ”சுகர்பாக்ஸ்” எனப்படும் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது மெட்ரோ. இந்த செயலியை (APP) டவுன்லோடு செய்து கொண்டால் பயணிகள் தங்களின் விருப்பம் போல், இந்த செயலியில் படங்களை பார்த்துக் கொள்ளலாம்.
Advertisment
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கிடைக்கும் க்ளோஸ்ட் லூப் வை-ஃபையை கொண்டு வாடிக்கையாளார்கள் படங்களையும் இசையையும் ரசிக்க முடியும். மற்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்களைப் போலவே இந்த செயலியும் பஃப்பர் ஆகாமல் படங்களை திரையிடும்.
இதில் பயணிகளுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால் இந்த வைஃபை கனெக்சனை வைத்து ஆன்லைனில் ஃப்ரௌசிங்க் செய்ய முடியாது. இந்த வைஃபை செட்-அப் முழுக்க முழுக்க சுகர்பாக்ஸ் ஆப்பிற்கானது மட்டும் தான். தற்போது பரங்கிமலை வழியாக செல்லும் மெட்ரோ லைனில் மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் வண்ணாரப்பேட்டை - விமானநிலையம் மார்க்கத்தில் செல்லும் மெட்ரோக்களிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இந்த ஆப் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த வைஃபையின் வேகம் குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறிய போது ”ஒரு நிமிடத்தில் ஒரு படத்தினையே மொத்தமாக டவுன் லோடு செய்துவிட இயலும். அவ்வளவு வேகமாக இந்த வைஃபைகள் இயங்கும். வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பில் படத்தினையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”