Cyclone Phethai :டிசம்பர் 15-ம் தேதி இரவு 9 மணி நிலவரப்படி, வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. ஆந்திராவின் மசூலிப்பட்டனத்தில் டிசம்பர் 17-ம் தேதி இது கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய வானிலை : பெய்ட்டி புயலால் ஆரஞ்சு அலர்ட்
சென்னை உள்பட வட தமிழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி கன மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் தமிழ்நாட்டுக்கு புயல் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
Bulletin 14: A #Depression over SE #BoB moved NW is about 440 km NE of #Trincomalee, 590 km SE of #Chennai and 770 km SE of #Machilipatnam. It is very likely to intensify into a #Cyclone during next 24 hrs&landfall over AP coast between Machilipatnam & Kakinada on 17th Dec pic.twitter.com/Db3EWwM57u
— TN SDMA (@tnsdma) 15 December 2018
முந்தைய தகவல்கள் கீழே:
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் வட மேற்காக தொடர்ந்து நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 670 கி.மீ தொலைவிலும், மசிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 870 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது இந்த புயல். அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் வலு கொண்ட புயலாக உருமாறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கிநாடாவிற்கு மத்தியில் புயல் கரையைக் கடக்கும் என்று கூறினாலும், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து எண்ணூர், கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறை முகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : புயல் எச்சரிக்கை கூண்டு எண் கூறும் அபாய செய்தி என்ன ?
மாலை 04:00 மணி நிலவரம்
Bulletin 13: A #Depression over SE #BoB moved NW is about 430 km NE of #Trincomalee, 670 km SE of #Chennai and 870 km SE of #Machilipatnam. It is very likely to intensify into a #Cyclone during next 24 hrs&landfall over AP coast between Ongole & Kakinada on 17th Dec (Afternoon) pic.twitter.com/PbKJynCD8K
— TN SDMA (@tnsdma) 15 December 2018
பகல் 12:30 மணி நிலவரம்
தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவின் அதிகாரப்பூர்வ இணைய ட்விட்டர் தளத்தில் தற்போது கரையை நோக்கி நகர்ந்து வரும் புயல் பற்றிய புதிய அப்டேட்டுகளை குறிப்பிட்ட நேரத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்.
Bulletin 12:A #Depression over SE #BoB moved NW is about 440 km NE of #Trincomalee, 690 km SE of #Chennai and 890 km SE of #Machilipatnam. It is very likely to intensify into a #Cyclone during next 24 hrs&landfall over AP coast between Ongole & Kakinada on 17th Dec (Afternoon) pic.twitter.com/XK14SC7gBu
— TN SDMA (@tnsdma) 15 December 2018
பகல் 12:00 மணி நிலவரம்
தற்போது மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநரான பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பெதாய் புயல் நிலவரத்தைப் பற்றி கூறிவருகிறார். தென் கிழக்கே, 690 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. நேற்றிலிருந்து சுமார் 260 தொலைவு கடந்துள்ளது. மணிக்கு 11 கி.மீ என்ற வேகத்தில் கரையை நோக்கி நகருகிறது
வட தமிழகத்தில் 15, 16 தேதிகளில் ஒரு சில இடங்களில், மிதமானது முதல் கனமழை பெய்யும். தரை காற்றானது மணிக்கு 45 - 55 கி.மீ வீசும் என்று அவர் கூறினார். 15,16, 17 தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக் கடல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்த வரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது 20 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது என்றும் கூறியுள்ளார் அவர்.
காலை 08:00 மணி நிலவரம்
தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் பெதாய் புயல் தற்போது வடமேற்காக நகர்ந்து வருகிறது. திரிகோண மலைக்கு கிழக்கே 540 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும், மசிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது இந்த புயல்.
Chennai New Weather Update Cyclone Phethai
அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறும். டிசம்பர் 17ம் தேதி மதியம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோலுக்கும் காக்கிநாடாவிற்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளாதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
Bulletin 10:A #Depression over SE #BoB moved NW is about 540 km East of #Trincomalee, 800 km SE of #Chennai and 990 km SE of #Machilipatnam. It is very likely to intensify into a #Cyclone during next 12 hrs&landfall over AP coast between Ongole & Kakinada on 17th Dec (Afternoon) pic.twitter.com/C39F5SUN1M
— TN SDMA (@tnsdma) 14 December 2018
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால். சென்னை காசிமேட்டில் 24 மணி நேரமும் செயல்படும் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னையில் பலத்த கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.