Chennai news 1750 pole cameras : பெண்கள் மிகவும் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் எப்போது இடம் பெற்றுவிட்டது சென்னை (தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கைப்படி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறைவாக உள்ள நகரங்களில் சென்னையும் என்று கூறப்பட்டுள்ளது). ஆனாலும் கூட பட்டியலில் இடம் பெற்றுவிட்டோம் என்று அதனோடு நிறுத்திக் கொள்ளாமல் பல்வேறு வகையில் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது சென்னை மாநகராட்சி.
பெண்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக பயணம் செய்வதையும், வேலைக்கு செல்வதையும், வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சென்னை மாநகராட்சி சென்னை முழுவதும் 1750 போல் கேமராக்களை பொருத்த உள்ளது.
அரிசி, கொண்டைகடலை, முட்டை…பள்ளி மாணவர்களின் வீடு தேடி செல்லும் உலர் உணவு பொருட்கள்
கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து நிறுத்தங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாகங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்ட நேரலை தகவல்கள் பெறப்பட்டு கண்காணிப்பு பணிகள் முழு வீச்சில் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 149 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. முகத்தை அடையாளம் காணும் கேமராக்களை பொறுத்தவும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஒரு சதுர கிலோமீட்டரில் அதிக அளவு கேமராக்களை பொறுத்தியுள்ள மாநகரங்களில் சென்னை ஒன்றாக இருந்த போதிலும், பல்வேறு அமைப்புகளால் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலம் பெறப்படும் காட்சிகளை கட்டுப்பாட்டு மையம் பெறுவதில் சிக்கல் உள்ளது என்பதால் கூடுதல் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் கேமரா பதிவுகளை பெற்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொறியாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil