Weather News, IMD Chennai Weather Forecast: கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டிசம்பர் 1-ம் தேதியான நேற்று பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழை அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, காஞ்சிபுரம், நெல்லை மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக பதிவாகியுள்ளது. தொடர் மழையால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளின் கொள்ளளவானது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னை வானிலை: அடுத்த 24 மணி நேரங்களுக்கு - வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30 மற்றும் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரங்களுக்கும் இதே நிலை தான் தொடரும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், இது போன்ற வடகிழக்கு பருவமழை தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Live Blog
Weather news updates : தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் ஒரு பக்கத்தில் இங்கே காணலாம்.
சென்னையில் உள்ள மாநில பேரிட கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “நாளை ஓரளவுதான் மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சென்னையில் மாநில பேரிடர் மீடுபுக் குழுவினர் தயாராக உள்ளனர். வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை” என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் தொடர்மழை பெய்துவருவதால், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை (டிச. 2) நடைபெற இருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், மேடவாக்கம் பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேடவாக்கத்தில் உள்ள சித்தேரி கரை உடைந்து வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
Sorry This Is Not A Normal Rain. Rains Are Pouring As Per Predictions.
PL: Perumbakkam, Pallikaranai#ChennaiRains pic.twitter.com/sPL95Kaj5i
— Chris (@iam_ChrisFelix) December 1, 2019
சென்னையில் தொடர் மழையைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் சாலையில் வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்காகவும் புகார் அளிக்க ஹெல்ப்லைனை அமைத்துள்ளது.
மழை தொடர்பான புகார்களுக்கு குடியிருப்பாளர்கள், 04425384520 மற்று 04425384530 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 9445477205 வாட்ஸ்அப் என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
சென்னையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற 630 நீர் இரைப்பு பம்புகல் தயார் நிலையில் உள்ளது. சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த 6 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னை முழுவதும் 176 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்தால், மக்களை வெளியேற்ற 109 இடங்களில் படகுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன” என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கேங்மேன் பணிக்கு நாளையும் நாளை மறுநாள் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றில் அடித்து வரப்பட்ட பசுமாடுகளை கடலூர் தீயணைப்புப்படை வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டனர்.
Well done 👍👏👏👏👏
கெடிலம் ஆற்றில் அடித்து வரப்பட்ட பசுமாடுகளை கடலூர் தீயணைப்புத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டனர்...@ANI#Rains #Rain #மழை #Chennai #ChennaiWeather #Puducherry #Pondicherry #கடலூர் #ChennaiRains #கனமழை @ChennaiRains @CuddaloreC pic.twitter.com/ybTrZa8vHw
— #கடலூர் & புதுவை மழை நிலவரம்🇮🇳 (@vinu7vinugmail) December 1, 2019
சென்னையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டார். அதேசமயம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் கூறியிருக்கிறார்கள்.
வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் கனமழை காரணமாக தெருக்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
Urapakkam 😐 #chennairain pic.twitter.com/ah320ilNul
— Ⓡⓞⓒⓚⓨ (@mahesh_vjay) December 1, 2019
தொடர் கனமழை காரணமாக சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பிவருகிறது.
Chembrambakkam lake 😍😍😍😍@praddy06 @ChennaiRains @chennaiweather @Chennai_Rains @JW_Chennai @Chennai_nem pic.twitter.com/cRzJbBUBIN
— Nandhakumar R (@Nandhakumardop) December 1, 2019
தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கன மழை காரணமாக தாம்பரத்தில் உள்ள கேம்ப்ரோடு - சேலையூர் சாலை வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய சாலையில், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன.
It’s pouring cats n dogs @ #Tambaram #Camproad #Selaiyur pathetic condition of this Velachery - Tambaram roads on acc of just 1hr pei mazhai !! #ChennaiRains @JW_Chennai @chennaiweather @ChennaiRains @ChennaiRaining @RainStorm_TN @parthasri201475 pic.twitter.com/YNHn8MWOQa
— Rajiv (@rajiv_great) December 1, 2019
கனமழை காரணமாக சென்னை அருகே சிங்கப் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
national highway, sp koil #chennairain #ChennaiFloods @chennaiweather @praddy06 @ChennaiRains pic.twitter.com/XZBn2BsXfh
— Madhan (@Madhan_up) December 1, 2019
புதுக்கோட்டையில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர்: தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பருவமழை காரணமாக கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியில் இருந்து 10 ஆயிரம் ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற செய்யப்படுகிறது. இதனால், வடக்கு கொளக்குடி, சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், சிறகிழந்த நல்லூர், கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
The bright sunshine around #Chennai is just setting the stage for #ChennaiRains. Expect some heavy duty action from the evening. #Comk பதுங்கும் புலி பாய்வதற்காக என்பது போல் தெளிந்த வானத்தை கண்டு ஏமாற வேண்டாம் மாலை / இரவில் பலத்த #மழை வாய்ப்பு மிக அதிகம் #தமிழகம் #வானிலை pic.twitter.com/W4hkETmkDU
— ChennaiRains (COMK) (@ChennaiRains) December 1, 2019
சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் வானிலை பகுதிகளை நோக்கி மழை தரும் மேகக்கூட்டங்கள் அதிக அளவு உருவாகி வருவதால் இன்று மாலை/இரவு வேளையில் கனமழை பெய்யக்கூடும். தற்போது வானிலை மந்தநிலையில் இருப்பதைக் கண்டு யாரும் ஏமார்ந்து விடவேண்டாம் என்றும், இரவில் மழை கொட்டி தீர்பதற்காக தற்போது இந்த மேகக் கூட்டங்கள் பதுங்கியுள்ளதாகவும் சென்னைரெயின்ஸ் ட்வீட் செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும்/ ஒரு சில பகுதிகளில் கனமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். மேலும், வங்கக்கடலில் புதிதாய் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகவில்லை என்றும், பொதுவாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தான் என்றும் தெரிவித்தார்.
இந்துமாக் கடலில் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க லட்சத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதகா சென்னை வானிலை மையம் தெரிவத்து இருந்தது . இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்கள் அவசர உதவிக்காக கட்டுப்பாட்டு அறை எண்களை வெளியிட்டுள்ளது . குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குதல் பற்றிய புகார்களுக்கு கீழே குறிப்பிடப்பட்ட நம்பர்களை பயன்படுத்தலாம்.
தொலைபேசி - 044 25384520, 044 25384530, 044 25384540 .
வாட்ஸ்ஆப் நம்பர் - 9445477205.
அடுத்த நான்கு நாட்களில் காற்றோடு மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் பண்ணை குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகள் சரிசெய்து மழைநீரை சேமிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் . நீப்பாசனம் செய்வதை தவிர்க்க கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டமான வானிலை காரணமாக, அங்கே
பயிர்களில் பூஞ்சை நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். இந்த பருவமழை காலம் முடிந்த பிறகு, பாக்கு தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் 220 கிராம் யூரியா, 220 கிராம் சூப்பர் பாஸ்பேட் , 230 கிராம் பொட்டாஷ் கொடுக்கப்படலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை எதிர்பார்க்கலாம். தண்ணீர் தேங்கிவிட்டால் ஆடு/மாடு போன்ற உயிரனங்களுக்கு foot rot நோய் வருவதற்கான வாய்புகள் அதிகமாகும். குளிர்ந்த வானிலை என்பதால் அதிகாலையில் செம்மறி ஆடு /ஆடு போன்ற மற்ற கால்நடைகளை அதிகாலையில் மேய்க்க அனுமதிக்காதீர்கள், ஏனெனில் நிமோனியாவை ஏற்படுத்தும் என்று சென்னை வானிலை மையம் விவசாய மக்களுக்கு ஆலோசனைகளை கொடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ( பொதுவாக வடகிழக்கு <பருவமழை ஆரம்பமாகும் காலம் )நவம்பர் 30ம் தேதி வரையில் தமிழகத்தில் சுமார் 348.9mm மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் இறுதி வாரத்திலும், நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும் அதிக அளவு மழை கொட்டியுள்ளது.
சராசரியாக , 1-10-2019 to 30-11-2019 இந்த காலகட்டங்களில் 355.7mm வரை கனமழை பதிவாகக்கூடும். எனவே சராசரியை விட தற்போதைய் வடகிழக்கு பருவமழையின் அளவு குறைவு என்றே சொல்ல வேண்டும்
மழைதரும் கருமேகங்கள் அதிகளவில் காஞ்சி-திருவள்ளூர் -சென்னை வட்டத்தில் அதிகமாக மையம் கொண்டுவருவதால் இந்த பகுதிகளில் இன்று கனமழையின் அழுத்தம் மேலும் அதிகமாகும் என்று சென்னை வேதர்மேன் ட்விட்டரில் தனது பதிவை செய்துள்ளார்.
முதல் படத்தில் - மேகக் கூட்டங்கள் காஞ்சி-திருவள்ளூர் -சென்னை வட்டத்தை நோக்கி நகர்வதை நம்மால் காணமுடிகிறது
இரண்டாவது படத்தில், இன்று இரவு மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் ( preicipitation rate ) அதிகமாக இருப்பதை உணரலாம்.
கனமழைக்கு தமிழக அரசு மிகவும் தயாராக இருப்பதாகவும், ஆயத்த பணிகளை மிகத் துல்லியமாக செய்து வருவதாகவும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights