Advertisment

மத்திய, மேற்கு தமிழகத்தின் கிராமப்புறங்களில் குறையத் துவங்கிய கொரோனா தொற்று

கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவி இருந்தாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஏற்படுத்தும் அளவிற்கு “க்ளஸ்டர்கள்” ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
coronavirus, covid19, today news, tamil news

Tamil Nadu sees slower fall in covid19 cases : கடந்த ஒரு வாரமாக கோவையின் கிராமப்புற பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் விதம் 51% ஆக அதிகரித்திருந்த போதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 49% ஆக குறைய துவங்கியது. நகர்ப்புறங்களில் தொற்று குறைய துவங்கியுள்ள நிலையில், கிராமப்புறங்களில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று வீதம், குறிப்பாக சூலூர் மற்றும் துடியலூர் பகுதிகளில் குறைந்து வருகிறது.

Advertisment

Tamil News Today Live : சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கியது

சூலூர் பகுதியில் பல்வேறு சிறு மற்றும் குறு தொழில்கூடங்கள் இருப்பதால் மே மாத மத்தியில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்த போது தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த பகுதியில் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அது போன்ற சூழல் ஏதும் நிலவவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நாங்கள் கொரோனா சோதனையை அதிகரித்தோம். அதிக சோதனைகளால், அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.

இதே போன்ற சூழல் தான் இதர மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் பதிவான வழக்குகளில் 75% வழக்குகள் கிராமப்புறங்களில் ஏற்பட்டவை. ஞாயிற்றுக்கிழமை பதிவான 517 வழக்குகளில் 350 வழக்குகள் மாநகராட்சி எல்லைக்கு வெளியே பதிவானது தான். கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவி இருந்தாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஏற்படுத்தும் அளவிற்கு “க்ளஸ்டர்கள்” ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

54 கட்டுபடுத்தப்பட்ட மண்டலங்கள் திருச்சியில் உள்ளன. அவற்றில் 48 மண்டலங்கள் கிராமப்புறங்களில் தான் உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. திருவெறும்பூரில் மட்டும் 12 மண்டலங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து லால்குடி பகுதியில் 8 மண்டலங்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு மக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வதால் திருவெறும்பூரில் அதிக அளவு கொரோனா வைரஸ்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 11 தெற்கு மாவட்டங்களில், 7 மாவட்டங்களில் 100க்கும் குறைவான வழக்குகளே நேற்று பதிவாகியுள்ளது. இதர மாவட்டங்களில் வழக்கு எண்ணிக்கை 200க்கும் குறைவாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment