இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்காக புதன்கிழமை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் வரை செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் / மாற்றுப்பாதைகள் நள்ளிரவு 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுத்தப்படும்.
இதையும் படியுங்கள்: 12 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்டிருக்கும் டவர்! தனித்துவ அம்சங்களுடன் அண்ணாநகர் பூங்கா
பெல்ஸ் சாலை: வாலாஜா சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை ஒரு வழிப் பாதையாக உருவாக்கப்படும். பாரதி சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து உள்ளே வர முடியாது. போட்டி முடிந்ததும் இது நேர்மாறாக செய்யப்படும். அதாவது பெல்ஸ் சாலை வழியாக உள்ளே வர முடியாது.
பாரதி சாலை: காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்களில் எம்.டி.சி பேருந்து மற்றும் பாஸ் உள்ள வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
விக்டோரியா ஹாஸ்டல் சாலை: விக்டோரியா ஹாஸ்டல் சாலை (கால்வாய் சாலை) பாரதி சாலையிலிருந்து "ஒரு வழிப்பாதை"யாகவும், வாலாஜா சாலையில் இருந்து உள்ளே வர முடியாததாகவும் மாற்றப்படும்.
வாலாஜா சாலை: அண்ணாசாலையிலிருந்து வாலாஜா சாலைக்கு வரும் M, P, T, W வரிசை எண் மற்றும் பாஸ் கொண்ட வாகனங்கள் மற்றும் எம்.டி.சி பேருந்துகள் பெல்ஸ் சாலையில் அனுமதிக்கப்படும்.
B & R எழுத்துகளைக் கொண்ட வாகனங்கள் பெல்ஸ் சாலையில் அனுமதிக்கப்படாது, மேலும் அவை MRTS மற்றும் பட்டாபிராம் கேட்டில் நிறுத்தப்படும்.
காமராஜர் சாலை: போர் நினைவிடம் மற்றும் காந்தி சிலையிலிருந்து M, P, T, W எழுத்துகள் கொண்ட பாஸ்களுடன் வரும் வாகனங்கள் மற்றும் எம்.டி.சி பேருந்துகள் பாரதி சாலை, கால்வாய்ச் சாலை வழியாக அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் பட்டினப்பாக்கம் சர்வீஸ் ரோட்டில் பார்க்கிங் செய்ய சர்வீஸ் ரோடுக்கு அனுப்பப்படும்.
பாஸ் இல்லாத வாகனங்களுக்கான அறிவிப்புகள்
அ) அண்ணாசாலையில் இருந்து வரும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாலாஜா சாலை, தொழிலாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக வந்து, தங்கள் வாகனங்களை பட்டினப்பாக்கம் சாலையில் நிறுத்த வேண்டும்.
ஆ) போர் நினைவிடத்திலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை சர்வீஸ் சாலை வழியாகச் சென்று, பட்டினப்பாக்கம் சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இ) காந்தி சிலையிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாகச் செல்லும் சர்வீஸ் சாலையில் வாகனத்தை பட்டினப்பாக்கம் சாலையில் நிறுத்த வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.