சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்திகள் சென்னை காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த போலி செய்திகளை தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை எற்படுத்தவும் சென்னை காவல் துறை சிறப்புக் குழுவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம் ஆத்மி வெற்றிக்கு நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம்? ப.சிதம்பரத்திடம் பிரணாப் மகள் கேள்வி
வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் சில நாட்களாகவே சென்னை காவல்துறையின் பெயரில் சில அவதூறு செய்திகள் பரவி வருகின்றன.
உதாரணமாக
- நீரழிவு நோயை கண்டறிகிறோம் என்று உங்கள் வீட்டிற்கு வந்து ரத்த பரிசோதனை செய்யும் கூட்டத்தை நம்ப வேண்டாம், இவர்கள் ஹெச்ஐவி(எய்ட்ஸ் ) நோயை திட்டமிட்டு பரப்பும் சமூக விரோதிகள் - இப்படிக்கு சென்னை போலிஸ்
- தமிகத்தின் வடக்கு பகுதிகளில் இருப்பவர்கள் குழந்தை கடத்தல் காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் - இப்படிக்கு சென்னை போலிஸ்
- பெண்கள் பாதுகாப்புக்காக இரவு நேரங்களில் பிரத்தியோக கேப் சேவை - இப்படிக்கு சென்னை போலிஸ்
இதுபோன்ற அவதூறு செய்திகள் திட்டமிட்டு பரப்புவதோடு மட்டுமல்லாமல், சென்னை காவல்துறையினர் சின்னத்தையும் பயன்படுத்துவது சட்ட-ஒழுங்கை கெடுக்கும் செயல் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு - இன்று முதல் அமல்
எனவே,தற்போது அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு குழு இது போன்ற போலி செய்திகளை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவும் போலி செய்திகள் குறித்த தெளிவாக்கமும் (உண்மை நிலவரங்களை ) பொது மக்களுக்கு புரியும் வகையில் உடனுக்குடன் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ facebook/twitter சமூக ஊடகங்களில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“