/tamil-ie/media/media_files/uploads/2022/10/Chennai.jpg)
தமிழகத்தில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் வழித்தடம் 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
அமைச்சர் நிதின் கட்கரி கூறியபடி, ரூ.5,800 கோடியில் 20.5 கி.மீ., சாலை 4 பிரிவுகளாக உருவாக்கப்பட்டு, சென்னை துறைமுகத்தில் துவங்கி, மதுரவாயல் சந்திப்பில் முடிகிறது.
இதையும் படியுங்கள்: அமைச்சர் பெயரைச் சொல்லி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மிரட்டல்: சி.ஐ.டி.யு புகார்
மத்திய அரசின் முதன்மையான கதி சக்தி உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், தடையற்ற மல்டிமாடல் இணைப்பை உறுதி செய்யும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். "திட்டம் 2024 டிசம்பரில் நிறைவடையும், மேலும் இது சென்னை செல்லும் துறைமுகப் போக்குவரத்திற்கான பிரத்யேக சரக்கு வழித்தடப் பாதையாக செயல்படும் மற்றும் சென்னை துறைமுகத்தின் கையாளும் திறனை 48 சதவிகிதம் அதிகரிக்கும், பின்னர் துறைமுகத்தில் காத்திருக்கும் நேரத்தை ஆறு மணி நேரம் குறைக்கும்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Strengthening #GatiShakti for the vision of #AatmanirbharBharat!
— Nitin Gadkari (@nitin_gadkari) October 3, 2022
Working towards providing seamless multimodal connectivity in #NewIndia, the project for Chennai Port to Maduravoyal corridor in Tamil Nadu has been developed at an estimated cost of Rs. 5800 Cr. #PragatiKaHighwaypic.twitter.com/byvGUf1GAy
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசாங்கம் விரைவான வேகத்தை அளித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்தும் என்று நிதின் கட்கரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.