Chennai Rains : டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Heavy Rain in Chennai IMD updates Tamil News

வானிலை அறிக்கை

Chennai Rains Live Updates : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 07/11/2021 அன்று மாலை 08:30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய தாழ்வு அழுத்தம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் காரணமாக வட தமிழக கடற்கரை மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடலோர மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இன்று சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக அதீத கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூ, கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னைக்கு இப்போ வராதீங்க மக்களே… அடாத மழை டாப் 10 ஹைலைட்ஸ்!

அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்கள்

சென்னை மாவட்டம் டி.ஜி.பி. அலுவலகத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. அயனாவரம் பகுதியில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எம்.ஜி.ஆர் நகரில் (17 செ.மீ), அண்ணா பல்கலைக்கழகம் (16 செ.மீ), புழல் (15 செ.மீ), பெரம்பூர் மாநகராட்சி பூங்காவில் 14 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

2015ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக அதிக மழைப் பொழிவுக்கு காரணம் என்ன?

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் காற்று 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால் இந்த பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
7:52 (IST) 8 Nov 2021
டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

வலிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

7:48 (IST) 8 Nov 2021
வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் “43 மணி நேரத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது என்று கூறியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருகிறது” மேலும் ” வடகிழக்கு பருவமழை அதிகளவில் பொழியும் என்றும் கூறியுள்ளார். மேலும் “கால்வாய் தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் நடந்த போது முதல்வர் நேரில் ஆய்வு நடத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

6:29 (IST) 8 Nov 2021
கடலூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்

கடலூர் மாவட்டத்தில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதா சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 2 நாட்கள் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

6:28 (IST) 8 Nov 2021
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட இருப்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபார எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்டோரா மூலம் மக்களுக்கு அவுறுத்தியுள்ள வருவாய்த்துறையினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

5:00 (IST) 8 Nov 2021
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார் ஈபிஎஸ்

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

4:56 (IST) 8 Nov 2021
சென்னை அடையாறு கால்வாயில் செல்லும் வெள்ளத்தில் தமிழ்நாடு அதிதீவிரப்படை வீரர்கள் ஒத்திகை

சென்னை அடையாறு கால்வாயில் செல்லும் வெள்ளத்தில் தமிழ்நாடு அதிதீவிரப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்று வெள்ளத்தில் சிக்கும் மக்களை காப்பாற்றும் முறையை தத்ரூபமாக ஒத்திகை செய்து வருகின்றனர்.

4:14 (IST) 8 Nov 2021
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

4:07 (IST) 8 Nov 2021
தமிழ்நாட்டுக்கு வரும் 10ம் தேதி ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில் நவம்பர் 10,11 தேதிகளில் அதிதீவிர மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால், நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 11ம் தேதி வட தமிழக கடற்கரையை நெருங்க உள்ளது. அதனால், தமிழ்நாட்டுக்கு வரும் 10ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3:04 (IST) 8 Nov 2021
அதிமுக தொண்டர்களுக்கு தலைமை அறிவுறுத்தல்

தண்ணீரில் த‌த்தளிக்கும் மக்களின் கண்ணீரை துடைப்போம், கடமைகளை ஆற்றுவோம் என்றும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல உதவுங்கள் என்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

3:02 (IST) 8 Nov 2021
கருணாநிதி நினைவிடம் – அரசாணை வெளியீடு

சென்னை, மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

2:32 (IST) 8 Nov 2021
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை

அடுத்த 48 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் தேதிகளில் கடலூர், பெரம்பலூரில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2:30 (IST) 8 Nov 2021
நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும் திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூரில் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

2:29 (IST) 8 Nov 2021
100% இருக்கைகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திரையரங்குகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், நிபுணர்களின் ஆலோசனைப்படி, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி மனுவை தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

2:26 (IST) 8 Nov 2021
90 சதவீத கொள்ளளவை எட்டிய புழல் ஏரி

3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,916 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அதனால், புழல் ஏரியின் 2 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளன. புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,357 கனஅடியாக உள்ளது.

1:25 (IST) 8 Nov 2021
90 சதவீத கொள்ளளவை எட்டிய புழல் ஏரி

3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு புழல் கொண்ட ஏரியில் 2,916 மில்லியன் கன அடி நீர் உள்ளது. புழல் ஏரியின் 2 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்ப்பட்டு வரும் நிலையில், புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,357 கனஅடியாக உள்ளது.

12:46 (IST) 8 Nov 2021
டெல்டாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

12:28 (IST) 8 Nov 2021
மழை பாதிப்பு- சென்னை மாநகராட்சியில் 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கவும், ஒவ்வொரு வேளையும் சுமார் 1.50 லட்சம் பேருக்கு உணவு சமைக்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது

12:14 (IST) 8 Nov 2021
அன்னை சத்யா நகர் பகுதியில் முதல்வர் நேரில் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தலைமை செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் முதல்வர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்

11:14 (IST) 8 Nov 2021
கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறப்பு

தெங்கல், கே.என்.பாளையம், பொன்னை, கொல்லப்பள்ளி, மேல்பாடி, வேப்பளை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

11:13 (IST) 8 Nov 2021
24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 11ம் தேதி வட தமிழகத்தை காற்றழுத்த தாழ்வு நிலை நெருங்கும் என்று அறிவித்துள்ளது.

10:27 (IST) 8 Nov 2021
நிரம்பும் மேட்டூர் அணை; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. அணை விரைவில் நிரம்ப உள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை அணை நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

10:24 (IST) 8 Nov 2021
நிரம்பும் மேட்டூர் அணை; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. அணை விரைவில் நிரம்ப உள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை அணை நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

10:18 (IST) 8 Nov 2021
இரண்டாவது நாளாக மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு வருகிறார் முதல்வர்

சென்னை கல்யாணபுரத்தில் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் இன்று இரண்டாவது நாளாக மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.

9:57 (IST) 8 Nov 2021
சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை என்றும், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அங்கே மெதுவாக ரயில்களை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

9:49 (IST) 8 Nov 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்றூ ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்.

9:27 (IST) 8 Nov 2021
விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதால் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

IMD Forecast Flash Flood Threat (PFFT) Moderate threat over few watersheds and neighborhood of Puducherry, Vellupuram and Cuddalore Districts of Tamil Nadu, in next 06 hours.(1/2) pic.twitter.com/KMsO9btVrT
— TN SDMA (@tnsdma) November 8, 2021
9:26 (IST) 8 Nov 2021
மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு

காவிரி நீர் பிரிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 27 ஆயிரத்து 600 கன அடி நீர் வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 117.61 அடியாக தற்போது உயர்ந்துள்ளது.

8:49 (IST) 8 Nov 2021
சென்னை மெட்ரோ சேவைகள் இயக்கம் இன்று எப்படி இருக்கும்?

கனமழை காரணமாக இன்று தமிழக அரசு சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்துள்ள்ளது. சென்னை மெட்ரோ சேவைகள் இன்று (08/11/2021), ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின் படி காலை 05:30 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை நீட்டிக்கப்பட்டு நாள் முழுவதும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

8:38 (IST) 8 Nov 2021
3 ரயில்வே சுரங்கப் பாதையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் கனமழை காரணமாக எழும்பூர் மற்றும் 3 ரயில்வே சுரங்க பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா சாலை கங்குரெட்டி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை மற்றும் கணேஷ புரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

8:10 (IST) 8 Nov 2021
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தொடர் கனமழை காரணமாக இன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

7:56 (IST) 8 Nov 2021
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை

சென்னையில் தொடர் மழை காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளாது. அத்தியாவசிய சேவைகளான ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சி துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.

7:55 (IST) 8 Nov 2021
14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை

கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

7:55 (IST) 8 Nov 2021
புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் விடுமுறை அளித்துள்ளது புதுவை அரசு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

7:55 (IST) 8 Nov 2021
பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், திருச்சி, நாகை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மற்றும் தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

7:55 (IST) 8 Nov 2021
பொன்னை நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகம் – ஆந்திர எல்லைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சித்தூரில் அமைந்துள்ளா கலவகுண்டா அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொன்னை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

7:54 (IST) 8 Nov 2021
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வரத்து 2,095 கன அடியில் இருந்து 710 கன அடியாக குறைந்துள்ளது. நீர் வரத்து குறைந்தாலும் கூட ஏரியில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி உபர் நீர் வெளியேற்றம்

Web Title: Chennai rains live updates tamil nadu rainfall weather updates rain forecast schools shut down

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com