Chennai Rains Tamil Nadu weather today latest updates : தென்சென்னையில் நேற்று இரவில் இருந்து பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் இந்த மழை தொடர்ந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். ஜூலை மாதத்தில் இது போன்ற மழை சென்னையில் பெய்வது மிகவும் அரிதானது என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை, மதுரை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை… சென்னையில் பொதுமக்கள் மகிழ்ச்சி!
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை இன்று மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : சென்னை வாசிகளே ப்ளிஸ் நோட்.. அடுத்த 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் பெய்ய போகும் மழை! வெதர்மேன் ரிப்போர்ட்.
நேற்று அதிக அளவு மழை பொழிவை பெற்ற இடங்கள்
சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் சேலம் மாவட்டம் 5 செ.மீ மழை
விழுப்புரத்தின் சங்கராபுரம், திருவள்ளூரின் சோழவரம், வடசென்னை பகுதியில் 4 செ.மீ மழை
கோவையின் வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்னக்கல்லாறு, திருவள்ளூரின் மாதவரம், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : தொடர்ந்து 3வது இரவாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை