Chennai Today Weather Tamil Nadu Southwest Monsoon 2019 Water Scarcity : 192 நாட்களாக சென்னையில் மழை இல்லாத காரணத்தால் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் இன்று வரும் நாளை வரும் என்று தினம் தினம் வானிலை அறிக்கை பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சமாக இருக்கின்றது. இந்த வார இறுதியில் (நேற்றும் & இன்றும்) மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று மழைக்கு பதிலாக வெயில் தான் அதிகமாக அடித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் இருக்க முடியாத அளவிற்கு வீட்டின் சுவர்கள், தரைகள் எல்லாம் கொதித்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாட்டினை சந்தித்து வரும் மக்கள், குடிநீர் தேவைக்காக, வேலைக்கு போகவேண்டாம் என்ற நிலையையும் கூட எட்டிவிட்டனர். சில இடங்களில் காலை போக்குவரத்து நெரிசல் ஒரு புறம் பின்ன, மதியப் பொழுதுகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்க, இரவு நேரங்களில் தான் லாரிகளில் வந்து டேங்குகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. நள்ளிரவு வரை மக்கள் தெருவில் நின்று தண்ணீர் பிடித்துச் செல்லும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது தற்போது.
சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ந்து தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில், வருகின்ற மழைக்காலம், சென்னையின் தண்ணீர் பிரச்சனையையோ, நிலத்தடி நீரின் பிரச்சனையையோ சரி செய்துவிடாது என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறார்.
அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
வழக்கத்தைவிட அதிகமாக வெயில் அடிக்கும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், திருச்சி, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்பதால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்.
சென்னை வானிலை
சென்னையில் சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஆனால் வெயிலில் எந்த மாற்றமும் இருக்காது. அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.