Chennai Triplecan Gaja Bhai Tiffen Center provided free biriyani to 200 poor people : இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை மிகவும் எளிமையாக தங்களின் வீடுகளிலேயே நேற்று கொண்டாடினார்கள்.
Advertisment
கொரானா வைரஸ் பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்து, பொது வழிபாட்டு தலங்கள் பிரார்த்தனைகள் ஆகியவற்றிற்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மசூதிகளில் கூட்டம் ஏதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கிறது காஜா பாய் டிபன் கடை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த கடை, கொரோனா காலத்தில் தினமும் ஆயிரம் நபர்களுக்கு உணவு தயாரிக்கிறது. அந்த உணவை சென்னை மாநகராட்சி மூலம் ஏழை எளிய மக்களுக்கு அளித்துவருகிறது காஜா பாய் கடை.
ரம்ஜான் காரணமாக நேற்று 200 ஏழைகளுக்கு பிரியாணி செய்து தந்தது பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜானை தொடர்ந்து நேற்று கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சமையல்காரர்களை வைத்து 200 பேருக்கு தேவையான சிக்கன் பிரியாணியை தயாரித்து வழங்கியுள்ளது.
35 கிலோ கோழி இறைச்சி மற்றும் 50 கிலோ அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உணவினை அந்த சாலையில் வசிக்கும் வயதானவர்கள், ஏழைகள் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு அளித்ததாக கடையின் உரிமையாளர் நூருதீன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“