ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த 2.4 லட்சம் லட்டுகள்; திருப்பதி பிரசாதம்னா சும்மாவா?

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லட்டுகளை விற்பனை செய்ய அம்மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக தேவஸ்தானம் காத்திருக்கிறது.

By: Updated: May 26, 2020, 11:13:03 AM

2.4 lakh subsidised Tirupati Laddus sold in Andhra Pradesh on day-one : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது வழிபாட்டிற்கு மார்ச் 24ம் தேதியில் இருந்து தடை நிலவி வருகிறது. பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்த மக்கள் ஆவலுடன் காத்திருந்தாலும், திருப்பதி கோவிலை இப்போது திறக்க இயலாது. பக்தர்களின் நிலையை உணர்ந்த திருப்பதி தேவஸ்தானம், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மற்றும் ஆந்திர மாவட்டங்களின் அனைத்து தலைநகர்களிலும் மானிய விலையில் திருப்பதி லட்டுகளை விற்க முடிவு செய்தது.

மேலும் படிக்க : கருநாகத்தை வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் – கேரளாவில் அதிர்ச்சி

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் நாளாக ஆந்திராவில் இருக்கும் 12 மாவட்ட தலைநகரங்களில் லட்டுகள் ரூ. 25-க்கு (மானிய விலையில்) விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் 2.4 லட்சம் லட்டுகள் நேற்று மற்றும் விற்று தீர்ந்துள்ளது.

குண்ட்டூரில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் அங்கே விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்டுகள் விஜயவாடாவிற்கு மாற்றப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் திருமண மண்டபங்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையங்களில் திருப்பதி லட்டுகள் பக்தர்களின் தேவைக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லட்டுகளை விற்பனை செய்ய அம்மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக தேவஸ்தானம் காத்திருக்கிறது.

மேலும் படிக்க : ”கர்மா”ன்னு ஒன்னு இருக்கு! மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:2 4 lakh subsidised tirupati laddus sold in andhra pradesh on day one

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X