”கர்மா”ன்னு ஒன்னு இருக்கு! மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், எருமை மாட்டு வண்டியில் பயணம் செய்த நல் உள்ளங்களை மனதார திட்டி வருகிறார்கள். 

By: May 26, 2020, 10:12:36 AM

Twitter Viral Video of a group of people racing buffalo cart : நாம் செய்கின்ற நன்மைக்கும் தீமைக்குமான பரிசு நம்மை வந்து சேரும் என்பதில் சந்தேகமே இல்லை. கர்மா ஒன்று இருக்கிறது என்பதை வாழ்வில் அனைவரும் உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு எருமை மாட்டு வண்டியில் இத்தனை பேர் சென்றால் அந்த மாடு எப்படி தான் தாங்கும். வாயில்லா ஜீவனை வதைப்பது கொடுமை என்பதை எப்போது தான் இந்த மக்கள் உணரப் போகின்றார்கள்.

மேலும் படிக்க : கருநாகத்தை வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் – கேரளாவில் அதிர்ச்சி

ட்விட்டர் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் 5 பேர் பயணம் செய்கிறார்கள். அந்த மாட்டு வண்டிக்கு பின்னால் நான்கைந்து இரு சக்கர வாகனங்கள் வருகின்றன. அனைத்தும் ஹாரன் அடித்து ஹாரன் அடித்து அந்த மாட்டினை உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கின்றனர். பார்ப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை போன்று இருக்கும் அந்த சாலையில் அவ்வளவு வேகமாக செல்கிறது அந்த எருமை மாடு.

மேலும் படிக்க : சென்னைவாசிகளே வெளியே வந்துறாதீங்க – அனல் காற்று அபாயம் : மழையும் சில இடங்கள்ல இருக்காம்

ஓரளவுக்கு பொறுத்து பொறுத்து பார்த்த எருமை நேராக சென்று, வண்டியை டிவைடரில் தட்டி இடிக்க வைத்து கீழே சாய்த்துவிட்டு, எந்த விதமான அடியும் படாமல் அப்படியே சென்றுவிட்டது.  வருண் சிங் என்ற நபர் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், எருமை மாட்டு வண்டியில் பயணம் செய்த நல் உள்ளங்களை மனதார திட்டி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Twitter viral video of a group of people racing buffalo cart

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X