Chennai water Scarcity : சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டினை சரி செய்யும் விதமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் படி வருகின்ற 7ம் தேதி முதல் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் க்கொண்டு வரப்படும்.
போர்கால அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை (10 MLD) காவேரி ஆற்றில் இருந்து பெற்று, ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை கடந்த வாரம் முதல்வர் அறிவித்தார். இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
மேட்டுச்சக்கரக்குப்பம் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில்நிலையத்திற்கு நீரை எடுத்துவர தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ வாட்டர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (Chennai Metropolitan Water Supply and Sewerage Board (CMWSSB)) மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியம் இந்த பொறுப்புகளை மேற்பார்வையிட்டு வருகிறது.
ஜோலார்பேட்டையில் இருந்து பெறப்படும் நீரானது வில்லிவாக்கம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, கீழ்பாக்கத்தில் அமைந்திருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு பின்னர் மத்திய சென்னையில் இருக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
வேலூரில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்துவோம் என்று திமுக பொருளார் துரைமுருகன் கருத்து வெளியிட்டார். பின்பு மக்கள் மற்றும் அதிமுக தரப்பில் இருந்து கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டதால் தன்னுடைய கருத்தினை திரும்பப்பெற்றுக் கொண்டார்.
மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள