Advertisment

சென்னை வானிலை : இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Chennai weather : அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இன்று பதிவாகக் கூடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai weather latest updates Heavy rain alert with thundershower

Chennai weather latest updates Heavy rain alert with thundershower

Chennai weather latest updates Heavy rain alert with thundershower : சென்னையில் நேற்று நள்ளிரவு நல்ல மழை இருந்தது. இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வானிலை குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் என்ன அறிவித்திருக்கிறது என்பதை இங்கு காண்போம்.  கன்னியாகுமரி, தேனி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

Advertisment

சென்னை வானிலை

இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இன்று பதிவாகக் கூடும். லேசனாது முதல் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சென்னையில் கனமழை… உள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

நேற்று அதிக அளவு மழையைப் பெற்ற இடங்கள்

தஞ்சையின் மதுக்கூர், திருவள்ளூரின் திருவிலாங்காடு, வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

திண்டுக்கலின் கொடைக்கானல், வேலூரின் சோளிங்கர் பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

திருச்சியின் சமயபுரம், மதுரையின் சோழவந்தான், நீலகிரியின் உதகை, சிவகங்கையின் காரைக்குடி, மதுரையின் மேட்டுப்பட்டி, பேரையூர், மற்றும் விருதுநகர் பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment