Chennai weather latest updates : அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிக பட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகக் கூடும்.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களைப் போலவே சென்னையிலும் அதிக பட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகக் கூடும்.
நேற்று அதிகபட்ச மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
உதகையின் ஜி பஜாரில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரியின் தேவலா பகுதியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோவையின் வால்பாறை பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரியின் நடுவட்டம் பகுதியிலும் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : ‘தமிழகத்தில் 10ம் தேதி முதல் டமால் டுமீல், ரெட் தக்காளி!’ – தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்